பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் is) "ஐயா சேவிக்கிறேன்’ என்று பெரும் கும்பிடு ஒன்று போட்டான் காத்தலிங்கம், அவனைக் கண்டதுமே விஷ யத்தைப் புரிந்து கொண்டார் ராமையாப்பிள்ளை. என்ன காத்து, என்ன விஷயம்?’ என்று கேட்டார். ‘ராத்திரி நீங்க சொன்ன விஷயமாத்தான் வந்தேன். எசமான் பண்ணையிலே காவல் வேலை ...... ’ என்று அவன் இழுத்தான். •. "அதுக்குச் சிங்காரத்தை ஏற்பாடு பண்ணலாமுன்னு கணக்குப்பிள்னை ஐயா......' என்று ஆரம்பித்தார் பிள்ளை. ‘ஹஹம்’ என்று தொண்டையைச் ☞gພົມut மீசையை மூலுக்கிவிட்டான் காத்தலிங்கம். சிங்காரம் அவசரமாகக் குறுக்கிட்டான் : எசமான், காவல் வேலைக்குக் காத்தலிங்கம் அண்ணன்தான் லாயக்கு. அண்ணன் மாதிரி சரியான ஆளு யாரும் கிடைக்க மாட் டாங்க......” - ஆமாமா என ஒத்து ஊதினார்கள் அவனைச் சேர்ந்த வர்கள். காத்தலிங்கத்தின் உதடுகளில் விளையாடப் பிறந்த தமட்டுச் சிசிப்பு அவனது அடர்ந்த மீசைக்குள் மறைந்து கொண்டது. 'அவன் பேரே காத்தலிங்கமாச்சே, அவன் வேறு எப்படி இருக்க முடியும்?' என்று ஹாஸ்யம் பண்ண முயன்றார் சாமையாப் பிள்ளை . - எல்லாம் திருப்தியாக முடிந்த நிறைவோடு எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.