பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 190. கரை மீது அனைவரும் கிழக்கு நோக்கி ஓடினார்கள். சற்று தூரம் தள்ளி, ஊரின் சுடுகாட்டுக்கு அருகில், கரை ஏறினான் பாண்டியன். அண்ணாச்சி ஓடிவந்து அவனைக் கட்டித் தழுவினார். 'தம்பி, யாரும் செய்யத் துணியாத காரியத்தை நீ சாதித் தாய். உனக்குத் தன்னம்பிக்கையும் துணிச்சலும் நிறைய இருக்கு. நீ வாழ்க!” என்று பாராட்டினார். மனிதரில் உதவாக்கரை என்று யாருமே கிடையாது. அவனவன் திறமை பிரகாசிக்க சரியான சந்தர்ப்பமும் மற்றவர்களுடைய ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் என்று கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார். "பாண்டிக்கு ஜே!' என்று கத்தினான் ஒரு பையன். 'ஜே ஜே!’ என முழங்கியது கூட்டம். 口 சோவியத் காடு - ஏப்ரல் 1991