பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரிழப்பு இந்த வருடம் எப்படியும் ஊருக்குப் போய்விட வேண்டி யதுதான்! இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற். றியது. இவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ, மூன்றாவது தடவையோ அல்ல. முந்நூறாவது தடவையாகவே இருக்கலாம். பூவுலிங்கம் பட்டணத்துக்கு வந்து முப்பது வருடங்களுக் கும் மேலாகியிருந்தது. அப்படி வந்த நாளிலிருந்து ஊருக்கு ஒருதரமாவது போயிட்டு வரணும் என்கிற ஆசையும் அவரது உள்ளத்தில் இடம் பெற்று வளர்ந்து வந்தது. காலப் போக்கில் அதுவே ஒரு தவிப்பாகவும், தணித்தாகப்படவேண் டிய தாகமாகவும் பேருருப் பெற்றிருந்தது. திருநாளை போவார்’ என்று சிறப்பு பெயர் பெற்றிருந்த நந்தனாருக்காவது, "நாளைக்குப் போகலாம்...தில்லைக்கு நாளை போய்விடலாம் என ஒரு வாயிதா கூறப்பட்டு வந் தது. அவரும் அதில் நிச்சய நம்பிக்கை வைத்திருந்தார். பூவுலிங்கத்துக்கு அந்த விதமான நம்பிக்கைக்கும் இடம் இருந்ததில்லை. அவரும் முப்பது வருடங்களாக செயல்