பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 194 பாக்கியம் என்றுதான் அவனை அறிந்த பலரும் எண்ணி னார்கள். த இல்லாத சூழலிலிருந்து பரபரப்பு மிகுந்த பகு நகருக்குச் செல்வது அந்தப் பையனுக்கு மிகுந்த உற் சாகத்தையே தந்தது. - பட்டணத்துக்கு வந்து சேர்ந்ததும், சில தினங்கள் வரை அவனுக்கு ஆனந்தம் குறையாமல்தானிருந்தது. புதிய சூழ்நிலை, புதிய புதிய முகங்கள், புதுப் புது அலுவல்கள் எல்லாம் மகிழ்ச்சி அளித்தன. ஆனால், நாளாக ஆக அந்த வாழ்க்கை சபைத் து லிங்கத்துக்கு அலுப்பு தருவதாகவே தோன்றியது. "இப்படி விட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்து ஓயாது வேலை செய்து கொண்டிருப்பதற்கு: பட்டணத்தில் இருப்பானேன்? பட்டிக்காட்டிலாவது இஷ்டம் போல் சுற்றித் திரிய முடிந்தது. நம்ம ஊரு பக்கத்திலே டவுனில் பலசரக்குக் கடைகளில் சில பையன்கள் வேல்ை செய்வார்கள். காலை ஏழு மணி முதல். இரவு பத்து பத்தரை வரை கடையிலேயே அடைபட்டுக் கிடக்கிற அவர்கள் டவுன் பூராவையும் சுற்றிப் பார்த்தது கிடையாது. பேரு மட்டும் பெரிசா 'டவுனிலே வேலை’ என்று அதுமாதிரிதான் நானும் பட்டணத்திலே பெரிய ஐயா விட்டிலே வேலை பார்க்கிறேன் என்று பேர்தான் இபரிசு. வெளியே போய் பட்டணத்தைப் பார்க்கக் கூட நேரமும் இல்லை. வசதியுமில்லை. இங்கே இப்படி வந்து ஜெயில் வாழ்க்கை அனுபவிப்பதை விட, நம்ம பக்கத்து டவுனில் ஏதாவது ஒரு கடையிலேயே வேலைக்கு சேர்ந் திருக்கலாம்' என்று அவன் மனக்கசப்புடன் எண்ண லானான். பிறகு நாளடைவில் அவன் சுற்றித்திரிந்து வேடிக்கை பார்ப்பதற்கு நேரம் தேடிக் கொண்டான். உண்பதற்கு