பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豊95 வல்லிக்கண்ணன் கதைகள் வசதியும், தங்குவதற்கும், படுத்து உறங்கவும் இடமும் இருந்தால் வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி அலைந்து வேடிக்கை பார்த்துப் பொழுது போக்குவதற்கு மிக ஏற்ற இடம் இந்தப் பட்டணம் என்று அவனுக்குத் தோன்றியது. பட்டணம் வந்து விட்ட பையனை அவன் தாயோ தகப் பனோ, ஊருக்குக் கூப்பிடவே இல்லை. ஒரு பிள்ளைக்கு சோறு போட்டு, துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் தொலைந்ததே என்றுதான் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆரம்ப காலத்தில் 'ஊருக்குப் போகனும்’ எனும் நினைப்பு தீபாவளி சமயத்திலும், பொங்கல் திருநாளின் போதும்தான் பூவுலிங்கத்துக்குத் தீவிரமாக வேலை செய்தது. "இப்ப ஊரிலே இருக்கணும் எவ்வளவு ஜோராக இருக்கும் தெரியுமா?’ என்று அவன் தன் நெஞ்சோடு புலம்பிக் கொள்வது வழக்கம். கைலாசப்பிள்ளையோ, அவரது குடும்பத்தினரோ அடிக்கடி சொந்த ஊருக்குப் போய்வரும் இயல்பு பெற்றிருக்கவில்லை. அபூர்வமாக எப்பவாவது பிள்ளை ஊர்ப்பக்கம் போவது உண்டு. அவர் மாத்திரம் அப்படி போகிறபோது, நீஇங்கேயே இரு. உன்னை ஊரிலே யாரு தேடுறாங்க!' என்று பூவு லிங்கத்தை தட்டிக் கழித்து விடுவார். அவர் இல்லாது குடும் பத்தினர் அனைவரும் புறப்படும் சமயத்தில், ஏண்டா நீயும் இவங்களோடு ஊருக்குப் போய்விட்டால் நான் என்னடா செய்வேன்? நீ ஊருக்குப் போயி என்ன பண்ணப் போறே? சும்மா இங்கேயே இரு' என்று உத்தரவு போடுவார். எப்படியோ தடங்கல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன அவனுக்கு.