பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 வல்லிக்கண்ணன் கதைகள் மதகுப் பாலம். அங்கே கொட்டுகிற சிறு அருவி - இப்படி எத்தனையோ சின்னச் சின்ன இனிமைகள் நெஞ்சில் தைக்கும் நினைவுகளாய் தலைதுரக்கின. - தன் கண்முன்னே எவ்வளவோ மாறுதல்களும் அழிவு களும் வளர்ச்சிகளும் புதுமைகளும் நிகழ்ந்து கொண்டிருந் ததை அவர் கவனித்து வந்தார். காலம் நிகழ்த்திய மற்றங்கள் பலப் பல. பட்டணத்தின் வெளித்தோற்றம் பெரும் மாறுதல்களைப் பெற்றுக் கொண் டிருப்பதை அவர் கவனிக்காமல் இருக்க முடியுமா? அவற்றை எல்லாம் காணக் காண, அவர் மனம் சிறு குளம் ஊரைப் பற்றியே எண்ணியது. அந்த ஊரும், வேக மாக இல்லாது போயினும் சிறிது சிறிதாகவேனும் மாறு தல்களை ஏற்று வளராமலா இருக்கும்? காலத்தின் கைவண் ணம் அச்சிற்றுருக்கும் அதிகமான அழகு சேர்திதருக்கும் என்று பூவுலிங்கம் எண்ணினார். அவர் வருடந்தோறும் எவ்வளவோ செலவுகள் செய் தார். குடும்பம் என்றால் செலவுகளும் வளர்ந்து பெருகத் தானே செய்யும்? அதிலும் அவர் மனைவி ஓயாத சீக்காளி யாக வந்து வாய்த்தாள். அவர்களுக்குப் பிறந்த குழந்தை களும் செலவினங்களைப் பெருக வைக்கக்கூடிய சாதனங் களாகவே அமைந்தன. தூர தொலைவில் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் பலர் திருப்பதிக்குப் போக வேண்டும், காசி யாத்திரை போக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு, பிறகு நேர்த்திக் கடனை தீர்ப்பதற்குப் போகமுடியாமல் ஆண்டுதோறும் எண்ணியும் பேசியும் காலத்தை ஏலத்தில் விட்டு ஏங்கி யிருப்பது போல, பூவுலிங்கமும் சொந்த ஊருக்குப் போய்