பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 罗{}空” பூட்டுகள் தொங்கின. எங்கும் கரையான் தன் ബോക്സ് தீவிரமாய்ச் செய்து கொண்டிருந்தது. - ஊர் ஓரத்தில் முன்பு பூவரசு மரங்களும் நந்தவனமுமாக அழகுடன் விளங்கிய தனித்தெரு இப்போது அடர்த்தியான குட்டை முட்செடி இன நீர்க்கருவை புதர்புதராக மண்டிக் கிடக்கும் பாழ்பட்ட பகுதியாகத் தென்பட்டது. ஊரின் எல் லையில் திடுமென ஓசை எழச் சிறு அருவிகள் விழும் மதகுக ளோடு இருந்த பாலம், இப்போது கனத்த சுவர் அமைப்பு களோடும் இறுக மூடிய பலகைகளோடும் புதுமைத் தோற்றம் பெற்றிருந்தது. மொத்தத்தில் ஊரே பலரகமான பொருள் ளும் தாறுமாறாகக் குவிந்து கிடக்கும் குப்பைமேடு மாதிரி தன்பட்டது, அங்கு வசித்த ஆட்களில் அவருக்குத் தெரிந்த -அவரை இனம் கண்டு கொள்ளக் கூடிய- நபர் யாருமே இல்லை. பலரும் வாழ்க்கைப் பிடிப்பு இல்லாத உருவங்கள் போல எலும்பும் தோலுமாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சித் துடிப்பு, உயிரோட்டம், உவகைத் துள்ளல், திருப்தி முதலியன பெற்ற மனிதர்களாகக் காணப்படவில்லை அவர்கள். வாழ்க்கை இயந்திரம் கசக்கிப் பிழிந்துவிட்ட சக்கைகளாய், சாரமற்ற முறையில் நாட்களை ஒட்டுகிற நிழல் களாய் திரிந்தார்கள். வாழ்க்கையே பெரும் தண்டனை ஆகிவிட, மரணம் எனும் விடுதலையை அடைவதற்காகக் காத்திருப்பவர்களைப் போல மண்ணைப் பார்த்தபடி தலை குனிந்து நடக்கும் உருவங்களையே அவர் கண்டார். இரவு வந்ததும், மின்விளக்குகள் பளிச்சென எரிந்தன. வெறுமையை, வறுமையை, பசுமையற்ற சூழலை வெளிச்ச மிட்டுக் காட்டவே அவை உதவின. ஏழரை மணிக்கே ஊர் அடங்கிவிட்டது. எட்டரை மணிக்குள் வீடுகளில் விளக்குகள்