பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வல்லிக்கண்ணன் கதைகள் அணைக்கப்பட்டு, ஊரே சுடுகாட்டு அமைதி பெற்ற இடமாக மாறி நின்றது. பூவுலிங்கம் பட்டணத்தை, அதன் பரபரப்பை, வெளிச்சி மினுக்குதல்களை, பகட்டை, படாடோபத்தை எல்லாம் எண் ணினார். இந்த நேரத்தில் நாகரிகப் பெருநகரம் எப்படி கோலாகலமாக ஜீவத்துடிப்புடன் இருக்கும் என்று நினைத் துப் பெருமூச்செறிந்தார். பட்டணத்தின் போலிப் பகட்டுமய வாழ்க்கை அவருக்குப் பிடித்திருக்கவில்லை. அதேபோல, கிராமத்தின் இருண்ட சமாதி நிலை வாழ்வும் அவருக்கு உகந்ததாக இருக்க வில்லை. நாகரிகப் பெருநகரங்களில் ஆத்மா இல்லாத- அல்லது சிதைந்து போன - வாழ்க்கைதான் கூத்தடிக்கிறது என்பது பூவுலிங்கத்தின் எண்ணம், அவருடைய உள்ளத்தில் மோகனமாய் கொலுவிருந்த சிறுகுளம் கிராமம் மனிதனுக்கு மாண்பு தரும் ஆத்மாவை கெளரவிப்பதாக - கிராம வாழ்வு ஆத்ம ஒளி பெற்றதாக - விளங்கும் என அவர் எண்ணியிருந்தார். அங்கும் வெறுமையைக் கண்டதும் அவர் நெஞ்சில் வேதனை ஏற்பட்டது. அவருடைய ஏமாற்றம் கொடிய தாய், ஈடு செய்ய முடியாததாக அவரை வருத்தியது. ஏதோ பேரிழப்பை ஏற்க நேரிட்டது போல் அவர் சோகமுற்றார். 'இந்த ஊர் இப்படி ஆகியிருக்கும் என்று தெரிய வழி இருந்திருக்குமானால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். இவ்வூருக்கு வந்ததனால், இதன் உண்மை நிலையை அறிய நேர்ந்த துக்கம் வேறு; என் மனசில் பதிந்திருந்த பசுமைச்