பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7 வல்லிக்கண்ணன் கதைகள் 'ஜோரா இருக்கும். ஜில்லுனு, குளுகுளுன்னு. அத் தந்த சீசனுக்குத் தக்கபடி பழங்கள் கிடைச்சுக்கிட்டே இருக் கும். அதிகாலையில் குயில் கூ...கூ எனு கூவும். குருவி கள் பறவைகள் எல்லாம் வெளிச்சம் வந்த உடனே காச்ச்ேனு கத்தும். அந்த சத்தத்தை கேட்டு நான் எழுந்திருப்பேன்டி.வி. வாங்கணும் கலர் டி.வி தானே?’’

  • பின்னே...

'அலமாரி, நாற்காலி, ஃபிரிஜ், டைனிங் டேபிள்... எல் லாம் வாங்கணும் அப்பா. நம்ம வீட்டிலே எதுவும் இல் லையே! ’ - 'பணம் கிடைச்சதும் வாங்கிப் போடுவோம்” 'வீட்டிலே உள்ளே நெடுக குழாய் பதிச்சு, ஒவ்வொரு ரூமிலும் வாஷ் பேசின் வச்சு, எங்கே திருகினாலும் தண்ணீர் கிடைக்கும்படி வசதி பண்ணனும்.'

  • >
  • “舒...

'எனக்கு ஒரு சைக்கிள் வாங்கணும்.’’ கட்டாயம் வாங்கிரலாம். ' ஜம்னு சைக்கிள்லே போவேன். ராஜாப் பயல், என் கிளாசிலே படிச்சானே அவன்... சைக்கிள்லே வாரான். நான் பின்னாலே ஏறிக்கிடுறேன்னு சொன்னா கூடாது - ஏத்த மாட்டேன்கிறான். எனக்கு சொந்த சைக்கிள் கிடைச்சதும் எவனையும் கேரியரிலே ஏற விட மாட்டேன். ஆமா’’ என்று உறுதியாகச் சொன்னான் கண்ணன். பிறகு ஆசையோடு கேட்டான்: ‘'எனக்கு வாட்ச் வாங் கித் தருவீங்களா அப்பா?