பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2 iO, அவன் ரூபாயை வாங்கிக் கொண்டான். சாமி படத்தின் முன்னே நின்று கண்களை மூடி, கை கூப்பி வணங்கினான். மனசுக்குள் வேண்டிக் கொண்டிருக்கலாம். 'போயிட்டு வாரேன் அப்பா... அம்மா, போயிட்டு வாரேன் - கூவியபடி வெளியேறினான் கண்ணன். "ஆமா. நமக்குத்தான் பரிசு விழுவதே இல்லையே. எதுக்கு திரும்பத் திரும்ப லாட்டரி சீட்டு வாங்குறீங்க?" என்று அம்மா கேட்டாள். 'என்னைக்காவது ஒரு நாள் விழாமலா போகப் பாகுது? நிச்சயமா விழும். பெரிய பரிசு. அது வந்ததும் ாம வசதியா ஒரு வீடு வாங்காமலா இருக்கப் போறோம்? ான்றார் அவர், நம்பிக்கையோடு. அவள் சிரித்தாள். நீங்களும் கண்ணன் மாதிரி சின்னப் பிள்ளை தான். ஒவ்வொரு தடவையும் சீட்டு வாங்குறது, குலுக்கலுக்கு முந்தின நாள், அதை வாங்குவோம் இதை வாங்குவோம். அங்கே போவோம், இங்கே போவோம்னு ஆசையா பேசி மகிழ்வதும் உங்க இரண்டு பேருக்கும் வேலை யாப் போச்சு, இப்படி எத்தனை காலமா நடக்குது! உங்க ளுக்கு இன்னும் அலுத்து போகலையா?’ என்று கேட்டாள். 'வறண்ட வாழ்க்கையில் பசுமையான கணங்கள் அவை. சந்தோஷத்தை வளர்க்கும் இனிய நினைப்புகள். அப்படி ஆசையோடு நினைப்புகளை வளர்ப்பதிலே ஒரு தனி சந்தோஷம் உண்டாகுது. அதை நீ ஏன் கெடுக்க விரும்புகிறே?’ என்றார் அப்பா. 口 "சுபமங்களா?-ஏப்ரல் 1991