பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வல்லிக்கண்ணன் கதைகள் இப்போது அது அழுத்தம் பெற்று நினைவில் சிலிர்க்க... அவன் வாடிய பூ முகத்தை எதிரே பார்த்தான். காலமும் வாழ்க்கையும் பாதித்திருந்ததால் பழுத்துக் கனிந்து விளங்கிய முதுமை முகம். இதுவும் தனி ஒரு அழகு பெற்றிருக்கத்தான் செய்தது. அவள், இறந்து போனவரைப் பற்றி, அவரது கடைசி அனுபவங்கள் பற்றி, அவருக்குப் பார்த்த பாடுகள் பண்டுவங் கள், வந்து பார்த்த டாக்டர்கள், வாங்கிய மருந்துகள் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகவும் - வந்திருப்பவன் துக்கம் விசாரிக்கத்தான் வந்திருப்பான். அவனிடம் சம்பிர தாய ரீதியில் அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற கடமை உணர்வினாலும், அவள் பேசினாள். அவன் காதுகள் அவ்வொலி அலைகளைக் கிரகித்துக் கொண்டிருந்த வேளையிலேயே அவன் மனம் அவள் சம்பந்த மான இறந்த கால நிகழ்வுகளை நினைவொளிக் காட்டி உள் வெளியில் உயிர்ப்பித்தவாறு இருந்தது. அவள் அவனுக்கு அறிமுகமான சமயம் அவளுக்குப் பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும். பருவ மலர்ச்சியின் விளிம்பிலே நின்றாள். அவனுடைய அம்மா வைத் தேடி வீட்டுக்கு வந்திருந்தாள். வர்ணம் வெளிறிய பாவாடையும், பழந்துணித் தாவணியும் அணிந்து உயர மாய், ஒல்லியாய், ஒளிக்கதிர் போல் காட்சி தந்தாள். அவ ளின் அந்தத் தோற்றத்தை அவன் மறக்க முடிந்ததில்லை. அப்போது அவனுக்கு வயது எட்டு. சுற்றி வளிைத்த ஒரு உறவில் பெரியம்மாவின் மகளாக இருந்த அவள்-அவளின் அக்கா ஆனாள். அக்கா இல்லாத அவனுக்கு அவனிடம் ஒரு பற்றுதலும், தம்பி இல்லாத அவளுக்கு அவனிடம் ஒரு பிரியமும் பாசமும் வளர்ந்து வந்தன. ஒடிய காலம் அவள் வாழ்க்கை ஏட்டில் புதிய புதிய அத்தியாயங்களை எழுதியது. விசேஷங்களும் நிகழ்ச்சி