பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் c 26 களும் மலர்ந்தன. வசதியான இடம், என்று கருதப்பெற்ற பெரிய வீட்டில் அவளுக்குக் கல்யாணம் நிகழ்ந்தது. ஏழ்மை நிலையிலிருந்து போதுமான வசதி வளம் என்ற களத்தில் அவள் அடி எடுத்து வைத்தாள். சந்தோஷங்கள் பூத்துக் குலுங்கின. பெண் குழந்தை பிறந்தது. மேலும் பெண்கள். பையன்... நல்லவனாகத் தோன்றிய கணவன் அவளுக்குச் சோதனையாக மாறினான். சூதாட்டப் பிரியன் ஆனான். புதுமையாக நாட்டிலே புகுந்து வளர்ந்த சினிமாக்கலையில் மோகம் கொண்டான். படம் பிடிக்கப் போவதாகத் திரிந்தான். பணத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொண்டான். பிசினஸ் பண்ணுவதாகச் சொல்லி, நகரவாசியாகி மேலும் பணத்தை விரயமாக்கினான். உடல் நலமும் சீரழிந்தது. வீட்டோடு வந்து முடங்கினான். பெண்களுக்குக் கல்யாணம் நடந்தது. அவரவர் வாழ்க்கையும் தனித் தனி 'அரிச்சந்திர புராணம்’ ஆயிற்று. மகன் சோம்பேறியாய், வீணனாய். பொய்ய னாய், குடியனாய் வளர்ந்து அவளுக்குத் தொல்லையானான். சகல பொறுப்புகளும் சுமைதாங்கியுமாக வசித்த அவள் தனது அறுபத்தைந்தாவது வயசில் கணவனை இழந்தாள். வாழ்வில் நிம்மதியற்று, நிஜமான சந்தோஷத்தை உண ராது, கஷ்டப்பட்டு நாளோட்டுகிற நிலைமை இப்போது. இதை எல்லாம் எண்ணிய அவன் காதுகளில் அவள் தனது குறைகளைக் கூறிக் கொண்டிருப்பது கேட்டது. தன் பெண்களின் துயரங்களைச் சொன்னாள். மகனின் இயல்புகளைக் குறை கூறி வருத்தப்பட்டாள். தனது இய. லாமைக்காக நொந்து கொண்டாள். இவ்வளவு பெரிய வீட்டிலே ராத்திரி நேரங்களில் தனியாக இருக்க எனக்கு என்னவோ பயமாயிருக்கு. சரி யான தூக்கம் கிடையாது. ஏகப்பட்ட கவலைகள். இப்படி