பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 3220 கணவன் குப்புசாமியைக் கூட அவளுக்குப் பிடிக்கவில்லை தான். பேரைப் பாருங்க! குப்புசாமியாம். அழகான பேரு எத்தனை இருக்கு. அதிலே ஒண்னு இதுக்குக் கிடைக்காமல் போச்சுதே. ஆளும் அழகு வழியுது. ஒவ்வொருத்தர் என் னென்னமா இருக்காங்க! சினிமாவிலே வருகிற கதாநாயக னுக மாதிரி. அவ்வளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமா வது லெட்சணமா இருக்கப்படாது? என் தலை எழுத்து. எனக்கென்று இப்படி வந்து வாச்சிருக்குதே என அவள் அலுத்துக் கொள்வாள். குப்புசாமி நன்றாக உழைக்கக் கூடியவன். பக்கத்துச் சிறு நகரிலிருந்த மில் ஒன்றில் வேலை பார்த்தான். காலையில் ஆறு மணிக்கே சைக்கிளில் போக வேண்டும். சாயங்காலம் திரும்பி வருவான். வந்ததும் தோட்ட வேலை அது இது என்று எதையாவது இழுத்துப் போட்டுக் கொண்டு பொழுது போக்குவான். அதெல்லாம் ரஞ்சிதத்துக்குப் பிடிக்கவில்லை. இது என்ன வேலை! டவுனில் ஒரு ஜவுளிக்கடையில் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்துக் குடியேறி விடலாம். நல்லா டீசன்ட்டா வேட்டி, சட்டை அணிந்து கொண்டு நாகரிகமா இருக்கலாம். பொழுது போக்காக சினிமாக்கள் பார்க்கலாம், என்று அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். புருசனிடமும் சொன்னாள். பிறத்தியாரிடமும் புலம்பினாள். அவள் பேச்சை அவன் சட்டை செய்யத் தயாராக இல்லை. இது பெரும் மனக்குறையாக இருந்தது அவளுக்கு. ரஞ்சிதத்துக்கு தான் ரொம்ப அழகானவள் என்ற பெருமை. அவள் பிரமாத அழகி இல்லை. ஆனாலும் இருக்கிற அழகு அம்சங்களை அலங்காரமாக, எடுப்பாகக்