பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

يwهم. - 22型 வல்லிக்கண்ணன் கதைகள் காட்டி, வசீகரமாக விளங்கக் கூடிய திறமையில் அவள் தேர்ந்திருந்தாள். தான் ரொம்பவும் புத்திசாலி என்ற கச்வ மும் அவளுக்கு இருந்தது. ‘எங்க வீட்டுக்கு எதிர்வீட்டிலே ஒரு லார்வாள் இருந்த தாக. ரஞ்சிதம், நீ இருக்கிற அழகுக்கு சினிமாவிலே உனக்கு சான்சு கிடைக்கும், நீ சீக்கிரமே ஸ்டாரு ஆகிவிட முடியும்னு அடிக்கடி சொல்லுவாக, நீ மட்டும் எட்டாவதோடு படிப்பை நிறுத்தாமல், மேல் கொண்டு படிச்சிகுந்தால், உனக்கு இருக்கிற அறிவுக்கு, உனக்கு நல்லவேலை எத்த னையோ கிடைக்கும். டீச்சராக வரலாம். அல்லது வேறு ஆபீஸ்களிலே வேலை தேடிக் கொள்ளலாம் என்பாக. ஊம்ம் என் விதி, நான் இந்தப் பாடாவதிப் பட்டிக்காட்டு ஊரிலே வந்து, இப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குள்ளே அடை பட்டுக் கிடக்க நேர்ந்திருக்கு!' இதுவும் ரஞ்சிதத்தின் புலப்பம் தான். தனிமொழியாகத் தன்னுள் பலநூறு தடவை புலம்பியிருப்பாள் இதை. அவ்வப் போது உரத்த சிந்தனையாகவும் இது வெளிப்பட்டு விடும். குப்புசாமி சிடுசிடுப்பான். உனக்கு இங்கே என்ன குறைச்சல்? இந்த ஊருக்கு என்ன குறை? அமைதி நிறைந்த அழகான ஊரு. வசதியான வீடு. டவுனிலே தெருக் கடியும் கும்பலும் பரபரப்பும் தான் மிகுதி என்பான். அவன் மனப்போக்கு அவளுக்குப் பிடித்ததாக இருக்க வில்லை. பேன்ட் மற்றும் ஸ்டைலான ஷர்ட் அணிந்து, விலை உயர்ந்த ஷ மாட்டிக் கொண்டு, பவுடரும் லெண் டும் பூசி, ஜம்மென்று இருக்க வேண்டும் தன் கணவன் என்று அவள் ஆசைப்பட்டாள். அவை அவனுக்கு உவப்பான விஷயங்களாக இல்லையே. ரஞ்சிதம் அவ்வாறு அலைகிற ஸ்டைல் ஆசாமிகளை விழி அகலப் பார்த்தாள். டவுனிலிருந்து அப்படி யாராவது