பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to - 3. 旁 哈 _ 229 வல்லிக்கண்ணன் கதைகள் தெருக்களில் நடந்தான். ஒட்டலுக்குப் போனான். பிறகு ரயில்வே ஸ்டேஷனில் போய் உட்கார்ந்திருக்கலாம்; வசதிப் பட்டால் படுத்தும் கிடக்கலாம் என்று நினைத்தான். போனான். சுமாரான ஸ்டேஷன். அந்நேரத்துக்கு வண்டி எதுவு மில்லை, பெஞ்சுக்கள் காலியாகக் கிடந்தன. ஒரு சுவர் ஒரத்தில், கல்தரை மீது நீட்டி நிமிர்ந்து சுகமாகத் துரங்கிக் கொண்டிருந்தான் ஒருவன். அருமையான காற்று, அமைதி யான சூழ்நிலை. சுயம்பு சுற்றிலும் நடந்து பார்த்தான். ஸ்டேஷன் அலுவல் அறை பூட்டிக்கிடந்தது. தொழிலாளிகளும் இல்லை. வண்டி வருவதற்கு அதிக நேரம் இருக்கும் எனத் தோன்றியது. சுயம்பு ஒரு பெஞ்சில் அமர்ந்தான். கருங்கல் தளத்தை, செம்மண் தரையை நீல வானை, வேப்ப மரங்களின் பசு மையை, சுவர்களின் வெண்மையை - இவ்விதமான வர்ண விஸ்தாரங்களை ரசித்தபடி இருந்தான். இவன் கண்களுக்கு விருந்தாக வேறு விதக் கலர் வந்து சேர்ந்தது. பளிர் வர்ண மில் லாரி கட்டிய ஒரு பெண். வயது என்ன இருக்கும்? முப்பதும் இருக்கலாம், நாற்பதும் இருக்க லாம்; இதற்கு இடைப்பட்ட எதுவாகவும் இருக்கலாம். இவ்வாறு கணக்கிட்டது அவன் மனம். அவளைப் பார்ப்பதும் பார்க்காதது போல் நடிப்பதுமாக இருந்த அவனை நைஸாக எடை போட்டபடி நடந்து வந்த அவள் எதிர் வரிசை பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தாள். அங்கு மிங்கும் பார்த்தாள். என்னங்க, வண்டி வர நேரமாயிடுச்சா?’ என்று கேட் டாள்.