பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 230 அங்கே வேறு எவரும் இல்லையாயினும், அவள் தன் னைப் பார்த்துத்தான் கேள்வியை விட்டெறிந்தாள் என்று புரிந்துகொள்ள அவனுக்கு நேரமாயிற்று. அதற்குள் அவளே ஐயா, தெற்கே போற வண்டி எப்ப வரும்? நேரம் ஆயிடுச்சா?' என்று விசாரித்தாள். சுயம்பு அவளை நேரடியாகப் பார்த்தான். எனக்குத் தெரியாதே. ரயில் எப்ப வரும்ணும் தெரியாது’’ என்றான். அவள் சிரித்ததுபோல் பட்டது அவனுக்கு தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். அவள் அவனை ஒரு தினுசாக நோக்கினாள். சிறிது நேரம் அங்கேயே இருந்தாள். பின் எழுந்து ஸ்டேஷன் உள்ளே போனாள். சுயம்பு அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந் தான். அவன் பார்வை சுற்றி நகர்ந்து, அவள் காலி செய்து போன இடத்தில் படிந்தது. வியப்புற்றது. அந்த பெஞ்சில் ஒரு பை-சின்ன பிளாஸ்டிக் பை; நீல நிறத்தில் கிடந்தது. அவள் வருவாள், எடுத்துக் கொள்வாள் என்று பேசியது மனம். - நேரம் மிக மெதுவாக ஊர்வது போல் தோன்றியது அவன் பொறுமையை சோதிப்பதாகவும் இருந்தது அது. கணிசமான நேரம் காத்திருந்து விட்டதாகப்பட்டதும் அவன் எழுந்தான். ஸ்டேஷன் உள்பக்கம் பார்த்தான். அவளைக் காணவில்லை. எங்கோ போய்விட்டாள். அவள் ரயிலுக்காக வந்தவளில்லை என்றே மனம் கூறியது. அந்த பெஞ்சு அருகே போய் அந்தப் பையை எடுத்தான். மீண்டும் அங்குமிங்கும் பார்த்தான். திறந்தான். பைக்குள் சில வெற்றிலைகளும் பாக்கும்தான் இருந்தன. ஒரு சிறு பொட்டணம். எடுத்து நோக்கினான். புகையிலை. இவ்வளவுதானா என்றது மனம். ஏமாற்றத்துடன் அதைக் கீழே போட்டான்.