பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 1 வல்லிக்கண்ணன் கதைகள் அதற்காகவே பதுங்கி நின்றவள் போல் வேகமாக முன் வந்தாள் அவள். 'என் பையை ஏன் எடுத்தே?’ என்று கேட்டபடி பாய்ந்தாள். குனிந்து பையை எடுத்தாள். உள்ளே பார்த்தபடி, எ, இதிலே இருந்த நோட்டு எங்கே? அம்பது ரூபா நோட்டு. நைசா அமுக்கிக்கிட்டியா?’ என்றாள். சுயம்பு பதறிப்போனான். எதிர்பாராத அதிர்ச்சி. அதிலே ரூபா நோட்டு எதுவும் இல்லே. வெத்திலை பாக்குதானே இருந்தது?’ என்று சொன்னான்.

  • களவாணி ராஸ்கல்! மரியாதையா ரூபாயைக் கொடுத் திரு. இல்லையோ, கூச்சல் போட்டு கும்பல் கூட்டுவேன் ' என்று அவள் மிரட்டினாள்.

"அதிலே ரூபாயே கிடையாது. நான் அதிலிருந்து எதையும் எடுக்கவுமில்லை' என்றான் அவன். அவன் உன் ளத்தில் ஒரு பீதி கவிழ்ந்தது. என்ன அநியாயமாக இருக் கிறதே என்று ஒரு நினைப்பு!

  • ஏ மரியாதையா ரூபாயைக் கொடு. இல்லே, தீ சீரழிஞ்சு போவே' என எச்சரித்தாள் அவள்.
  • நான் எடுத்திருந்தால் தானே தர முடியும்?’’

இங்கே என்ன தகரால்? கரகரத்த குரலில் கேள்வி எழுப்பியபடி ஒரு காக்கிச் சட்டைக்காரன் அங்கே வந்தான். அங்கே கூலி வேலை செய்கிறவனாக இருக்கும்.

இந்த ஆளை சரியா விசாரி. பகலு வேளையிலேயே ஐயாவுக்கு என்னமோ மாதிரி இருக்குதாம். என் கையைப் புடிக்கிறாரு என்றாள் அவள்.

சுயம்புவுக்குப் பகீரென்றது. அடிப்பாவி! பழிகாசி! என்ன துணிச்சல் என்றது மனம், பொய்! சுத்தப் பொய்' என்று கத்தினான். “தெரியும்டா! நீ பெரிய யோக்கியன்! உன்னை மாதிரி ஆசாமிகதான் என்னென்னவோ பண்றானுக!' என்று சுயம் புவை நெருங்கினான் முரடன்.

    • என் பேக்லேயிருந்த ரூபா நோட்டைக் காணோம். அதை இங்கே வச்சிட்டு உள்ளாற டைம் பார்க்கப் போனேன். இவன் பையைத் திறந்து நோட்டை எடுத்திருக்கான். பக்கத்திலே வந்து கேக்கிறப்போ என் கையைப் புடிக்கி றான் என்று பழி சுமத்தினாள் அவள்.
  • அப்படியாடா நாயே?’ என்று சுயம்புவின் சட்டையை இறுகப் பிடித்தான் முரடன்.