பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 வல்லிக்கண்ணன் கதைகள் மிகவும் நேர்மையாகவும், ஒழுங்காகவும் குற்றங்குறைகள் இன்றியும் வேலை பார்த்து வந்த காத்தலிங்கத்துக்குத் திடீ ரென்று என்ன மனக் கோளாறு வந்து விட்டது என்று பண்ணையார் ஆச்சரியப்பட்டார். குடிகாரப் பயல், நிலையான மனசு கிடையாது அவ. னுக்கு என்று கணக்குப்பிள்ளை எண்ணினார். இதற்கெல்லாம் காரணம்o "நான் இனி காவல் வேலை பார்க்க முடியாது. என் போக்கிற்கு அது ஒத்துவரலே என்று சொல்லிவிட்டு, காத்த லிங்கம் விலகிச் சென்றதேயாகும். . "அப்பாடா, காத்தலிங்கம் ஒரு மாதிரியாத் தொலைஞ் சான். நிம்மதியாய்த் தூங்க முடிகிறது என்று இடைக் காலத்தில் மகிழ்ந்து போன குறுங்குடியினர் மறுபடியும் ஒரு நாள் இரவிலே துர்க்கனவு கண்டதுபோல் பதற நேர்ந்தது. 'பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம்...... என்று கோரக் குரலில் பாட்டை ஒலி பெருக்கிக்கொண்டு, இரவின் அமைதியைக் குலைத்தவாறு அலைபவன் காத்தலிங்கம் என் பதை உணர ஊராருக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? அன்றே ராமையாப்பிள்ளை தற்செயலாக அவனைச் சந் திக்க நேர்ந்தது. என்ன காத்தலிங்கம், ஏது மறுபடியும் இப்படி?’ என்று கேட்டார் அவர். 'காத்தின் குணம் என்ன? இஷ்டம் போலத் திரிவது. காத்தைப் புடிச்சு நீ இந்த இடத்திலேதான் இருக்கணுமின்னு யாராலேயும் கட்டிப்போட முடியுமா? காத்தலிங்கமும் அப். படித்தான் இஷ்டம்போல் சுற்றித் திரியாமல் ஒரு இடத்தில்ே நிலையாக இருப்பதுன்னு சொன்னால் அவனுக்குக் கட்டி வராது என்றான் அவன்.