பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கதைகள் 2 f சுற்றுவதிலுமே வாழ்க்கையைக் கவலை இல்லாமல் கழித்து வந்தார். ஒரே இடத்தில் தங்கியிருப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம் கிடையாது. ஓர் இடம் அலுத்துப்போனால், குடிசையைக் கிளப்பிக் கொண்டு வேறு இடத்துக்குக் குடி புகுவார். அப்படித்தான் இங்கும் வந்திருந்தார். இந்த இடம் அவர் மனசுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. நகரத்தின் பரபரப்புகளை விட்டு விலகி, பசுமையான தனியிடமாக இருந்தது. மரங்களும் பூஞ்செடிகளும் கிணறுமாய் சூழ்நிலை குளு குளு என்றிருந்தது. அருகிலும் பெரிய வீடுகளோ சிறு குடிசைகளோ இல்லை. வலப்புறம் ஒரு வீடு இருந் தது. வீட்டுக்காரர்கள் வசித்த வீடு இடப்புறம் சிறிது தள்ளி இருந்தது. புதிதாக வந்திருக்கும் நபர் ஒதுங்கி வாழும் பிராணி என்று புரிந்து கொண்டு, அவ்வீடுகளில் உள்ளவர்களும் இவரை விட்டு ஒதுங்கியே போனார்கள். இன்று வரை குழந்தைத் தொல்லையும் இல்லாமல் இருந்தது. "இதை ஆரம்பத்திலேயே அடக்கி ஒடுக்கி விட வேண்டும். மிஞ்ச விடப்படாது' என்று சிடு சிடுத்தது அவர் உள்ளம். வெகுநேரம் அவதிப்பட்டு, எழுதலாம் என்று உற்சாகத் தோடு ஆரம்பித்த வேலை எடுத்த எடுப்பிலேயே தடைப் பட்டுப்போனதால், சொக்கலிங்கத்தின் உளக்கிளர்ச்சி படுத்துவிட்டது. அழுமூஞ்சி மனசோடு அங்கே முடங்கி யிருப்பதை விட, வெளியே போய் சுற்றிவிட்டு வரலாம்; அதுதான் மகிழ்ச்சிகரமான அலுவல் என்று என்று எண்ணி அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார் அவர். அவர் திரும்பி வரும்போது இருட்டிவிட்டது. குழந்தை தென்படவே இல்லை, பக்கத்திலே எங்கேயாவதிருந்து