பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - வல்லிக்கண்ணன் வந்திருக்கும் இங்கே விளையாட!’ என்று எண்ணிக் கொண்டார், வீட்டுக்குப் போயிருக்கும். அநேகமாக இனி மேல் வராது.” அந்த எண்ணம் தவறானது என்பது மறுநாளே அவ ருக்கு விளங்கிவிட்டது. குழந்தைகள் பட்டாளம் அங்கும் இங்கும் ஒடியாடிக் கூச்சலிடத் தொடங்கின. அவருக்கு எரிச்சல்தான். என்ன செய்வது? நல்ல வேளையாக, வீட்டுக்காரர். அந்தப் பக்கமாக வந்தார். அவரே பிள்ளைகளை விரட்டினார். ஏ இங்கே என்ன கூச்சல்? இந்தப் பக்கம் வந்து இப்படி சத்தம் போடக்கூடாது. அப்படி தோட்டத்திலே போய் விளை யாடுங்க. ஒடி ஆடிக் கூச்சல் போடாமல் ஓர் இடத்திலே உட்கார்ந்து விளையாடுங்க” என்று எச்சரித்து அனுப் பினார். - அவர்தான் துரத்திவிட்டாரே. அந்தப் பிள்ளைகளைப் பற்றி அவரிடம் நாம் குறைகூற வேண்டியதில்லை. எங்கே உள்ள பிள்ளைகள் என்று வீணாக விசாரிப்பானேன்? என்று சொக்கலிங்கம் சும்மா இருந்து விட்டார். பிறரிடம் அநாவசியமாகப் பேச்சுக்கொடுப்பதும் அவருக்குப் பிடிக்காது தான. அன்று பிற்பகல் சொக்கலிங்கம் எழுதுவதிலோ படிப் பதிலோ உற்சாகம் இல்லாதவராக சும்மா நாற்காலியில் சாய்ந்திருந்தார். வாசலுக்கு வெளியே ஒரு சிறுமுகம் எட்டிப் பார்த்தது. வண்டு விழிகளும், சிரிப்பு ஊறும் உதடு களும், களையான முகமும் வாயாடிச் சிறுமி என்று காட்டிக் கொடுத்தன. அவர் பாராததுபோல் இருந்தார். 'உள்னே வரலாமா?’ என்று கேட்டாள் அவள். "வரக் கூடாது' என்றார் அவர்.