பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கதைகன் 93 'நீங்க என்ன ஆட்டுக் குட்டியா?’ என்று கேட்டுக் கொண்டே சிறு பெண் உள்ளே வந்தாள். அவருக்குப் புரியவில்லை. * என்ன உளறுதே?’ என்று கேட்டார். .

  • வெளியே நின்று வேங்கைப் புலி வரலாமான்னு கேட்கும். உள்ளே இருந்து ஆட்டுக்குட்டி வரக்கூடாதுன்னு: சொல்லும். விளையாட்டிலே அப்படி. நீங்க ஏன் இப்ப வரக் கூடாதுங்கிறீங்க?"

இதைக் கேட்டுவிட்டு அவள், மணிகளை உலுக்கியது போல், கலகலவெனச் சிரித்தாள். பயம் கொள்ளாமலும், சாமர்த்தியமாகவும் பேசி, கவலை இல்லாமல் சிரிக்கிற அந்தப் பெண்ணைக் கோபித்து வெளியே விரட்டுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. இருந்தாலும் மிடுக்கை விட்டுக் கொடுக்காமல், ஏய் வேங் கைப் புலி, நீ வீட்டுக்குள்ளே எல்லாம் வரலாமா?’ என்று வறண்ட குரலில் பேசினார்.

  • ஏன் வரப்படாது?’

‘நான் எழுதுறதுக்கும் படிக்கிறதுக்கும் இடைஞ்சலா இருக்கும்...' 'இப்போ நீங்க எழுதவும் இல்லே. படிக்கவும் இல் லையே? பொழுது போகாம முழிச்சிக்கிட்டு இருக்கிற உங்க ஞக்கு பொழுதும் போகும், நான் படங்களைப் பார்த்த மாதி ரியும் இருக்குமேயின்னுட்டுத் தான் வந்தேன். நீங்க ரொம் பக் கோபிக்கிறேளே! - அவருக்குச் சட்டென்று பதில் சொல்லத் தோன்ற வில்லை. அதெல்லாம் வரப்படாது. சின்னப் புள்ளைக்கு இங்கே என்ன வேலை?’ என்று தான் சிடுசிடுத்தார்.