பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வல்லிக்கண்ணன் வேடிக்கையாக இருந்தன. அவளை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘என் முகத்திலே என்ன இருக்கு? தட்டிலே தேன்குழல் இருக்கு. அதைத் துன்னுங்க...” 'இது ஏது? "எங்க அம்மா கொடுத்தாங்க. உங்களுக்குத்தான். இதை கொடுக்கத்தான் என்னைக் கூப்பிட்டாங்க. எங்க ஆச்சி வீட்டிலே இருந்து கொண்டு வந்தது. நேற்று நான், எங்க ஆச்சி, சின்னம்மா குழந்தைகள் எல்லாம் வந்தோம். சரோஜா, தேவகி, உஷா, ஆனந்தி எல்லாரும் ஊருக்குப் போயிட்டாங்க. ஆச்சியும் போயாச்சு...' 'நீ போகலியா? "நான் இங்கேயேதான் இருப்பேன்,' ஓயாத தொல்லைதான் என்றது அவர் மனம். அதைச் சாப்பிடுங்க மாமா. நான் போய் காப்பி எடுத்தாரேன்...” “கர்ப்பி வேண்டாம். அப்புறம் ஒட்டலில் சாப்பிட்டா போச்சு, மற்றவர்களுக்குச் சிரமம் தரப்படாது. "எங்க வீட்டிலேதான் காப்பி போட்டாச்சே. இன்ன மேயா போடப்போகுது?’ என்று சொல்லி விட்டு, குதித் தோடிப் போனாள் பத்மா. - காப்பி டம்ளரோடு விரைவிலேயே வந்து சேர்ந்தாள். அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கேயே நின்றாள். ஓயாது பேசிக்கொண்டேயிருந்தாள். .