பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*:S வல்லிக்கண்ணன் 'நீ இங்கே வந்து இப்படி எல்லாம் தொந்தரவு பண்ணப் படாது' என்று அவர் ஒவ்வொரு நாளும் எத்தன்னயோ தடவைச் சொல்ல நேர்ந்தது. பத்மாவின் அப்பாவும் அடிக் கடி எச்சரித்துக் கொண்டுதான் இருந்தார். நீ சும்மா சும்மா அங்கே போகக் கூடாது. விஷமம் பண்ணக்கூடாது. அவர் வேலை கெட்டுப்போகும்’ என்பார். அந்த மாமா வேலை ஒண்னும் பார்க்கலே அப்பா. கம்மா சோம்பேறித்தனமா உட்கார்ந்து, புஸ்தகத்தைப் பார்த்துக் கிட்டே இருக்காங்க!' என்று அவள் சொன்னாள். அதுதான் அவர் வேலை’ என்றார் அவர். இதுவும் ஒரு வேலையா ஏஹே' என்று கெக்கலித் 3ாள் சிறுமி. - அவள் தாயும், அந்த அறைக்குள் போய் அவள் தொந்: தரவு கொடுக்கக்கூடாது என்று நயமாகவும் பயமாகவும் ாடுத்துச் சொல்லி வந்தாள். பத்மா கேட்டால்தானே! அவன் சிறு குருவி மாதிரி அங்கும் இங்கும் திரிந்தாள். தோட்டத்தில் ஒடி ஆடி மகிழ்ந்தாள். செடிகளிடையே விளையாடிக் களித்தாள். அவ்வப்போது அந்த அறைக்குள் ளும் நுழைந்து பொழுது போக்குவது அவளுக்குப் பிடித்தி குந்தது. - பத்மாவின் வருகை இளம்கதிரின் பொன்னொளி போல் பரவும். புதுமலரின் நறுமணம் போல் நிலவும். மென்காற் றின் குளுமையான தீண்டுதல் போல இனிமைதரும். ஒவ் வொரு முறையும் அது புதுமை நிறைந்ததாய் விளங்கியது. அவள் வருவதும் போவதும் தொல்லையாக இருந்தாலும் அதுவே தனி இன்பமாகவும் அமைந்தது, வறண்ட கோடை பயணம் போன்ற அன்றாட வாழ்வில் குளிர்தரு