பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கிண்ண்ன் கதைகள் 29 இனிமைகளாகத் தோன்றிய அத்ெ தால்லைகளும் ேதவை தான் என்று கருதும் பக்குவ நிலையை அவர் மனம் எய் தியது. - பத்மா, பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று முரண்டு பண்ணி வந்தவள், ஒழுங்காகப் படிக்கப் போக ஆரம்பித் தாள். அதனால் சொக்கலிங்கத்துக்குப் பகல் வேலைகளில் நிம்மதி கிட்டியது. என்றாலும், பள்ளிக்கூடம் போவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும், மாலையில் திரும்பி வந்த பிறகும் அவருடைய அறையிலேயே பழியாய் கிடக்க லானாள். நானும் ரொம்ப நிறையப் படிக்கப்போறென். நீங்க வச்சிருக்கிற பெரிய பெரிய புஸ்தகங்களை எல்லாம் நானும் படிப்பேன். அதை எல்லாம் எனக்குத் தருவீங்களா?” என்று அவரிடம் கேட்டாள். அச்சிறுமியின் பேராசை அவருக்குச் சிரிப்பு விளை வித்தது. ஆயினும், ஒ!' என்று சொல்லி வைத்தார். "அப்ப எனக்கு படிப்பு சொல்லிக் கொடுங்க!' என்று சிலேட்டையும், பாடப் புத்தகத்தையும் அவர் முன் நீட்டி னாள். . - பத்மாவினால் தனது நேரங்களில் பெரும்பகுதி வீணாகி விடுகிறது என்று சொக்கலிங்கம் அநேக சமயங்களில் வருத்தப்பட்டாலும், அந்தப் புத்திசாலிக் குழந்தையின் நட்பு ஓர் இனிய அனுபமாகவும் அரிய வாய்ப்பாகவும் அமைந்துள் :ளது என்றும் மகிழ்வுற்றார். பள்ளித் தோழிகளைப் பற்றியும், டீச்சரம்மாக்கள் பற்றியும், தனது சிறு உலகத்தில் நிகழும் விசேஷங்கள் பற்றி யும் அவள் சுவாரஸ்யமாகப் பேசுவாள். அவர் படிப்பில் ஈடுபட்டிருந்தாலும், சும்மா என்ன படிப்பு? நான் இல்லாத போதுதான் உங்களுக்கு எவ்வளவோ நேரம் இருக்குதே