பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வல்லிக்கண்ணன் படிக்க' என்று அவரை வம்புக்கிழுத்து, கதை அளப்பாள். தன்னோடு விளையாடும்படித் தூண்டுவாள். ஆரம்பத்தில் இவை எல்லாம் அவருக்குச் சங்கடங்கள் ஆகவும், மனப்புழுக்கம் ஏற்படுத்துவனவாகவும் இருந்த போதிலும், பழகிப்போனதும் இவையும் தேவைதான் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டன. பிறருடன் தாராளமாகப் பழகி விளையாட விரும்பாத பத்மாவும் அவருடன் மிகவும் ஒட்டுதலாக உறவு கொண்டாடினாள். அவள் அவரைச் சிலசமயம் வேங்கைப் புலி’ என்று குறிப்பிடுவதும், அவ. னையே அப்பெயரால் அவர் அழைப்பதும் இருவருக்கும் தமrஷாக இருந்தது. ‘என் சின்னச் சினேகிதி என்றும் அவர் பிரியமாகக் கூறுவது வழக்கம். - எட்டு வயசுச் சிறுமியோடு பெரியவரான அவர் சினேகம் வளர்த்து, சகஜமாகப் பேசிச் சிரித்து விளையாடுவது பார்ப்ப வர்களுக்கு வேடிக்கையாகப்பட்டது. பிறர் கருத்தைப் பற்றி அவ்விருவரும் கவலைப்படவில்லை. ஒரு சமயம் பத்மாவுக்குக் கடுமையான நோய் கண்டது. அப்பொழுது சொக்கலிங்கத்தின் உள்ளம் மிகுதியும் துயருற். தது. பலவீனமான உணர்ச்சிகளுக்கு அப்பால்பட்டவன் என்று தன்னைப் பற்றிப் பெருமையாகக் கருதிக் கொள்ளும் அவருக்கே அவருடைய வேதனையும் தவிப்பும் அதிசயமாகத் தோன்றின. அச்சிறுமி குணமடைந்து, இயல்பான போக்கில் கவலையற்று திரியவேண்டும் என்று அவர் பெரிதும் விரும் பினார். அதற்காகத் தன்னால் இயன்றதை எல்லாம் செய்தார். மீண்டும் அவள் சிட்டுக்குருவி போல் துள்ளித் திரியத் தொடங்கியதும் தான் அவர் மனம் மகிழ்ச்சி அடைந்தது. அந்தப் பெண்ணும் தனது குறைகளை, தேவைகளை, விருப்பங்களை, எண்ணங்களை, கனவுகளை எல்லாம்