பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வல்லிக்கண்ணன் கதைகள் சொக்கலிங்கம் எழுந்து, அறைக் கதவைத் திறந்தார். விளக்கு வெளிச்சம் பிடித்துக் காட்டிய காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. வாசலுக்கு நேரே பத்மா கிடந்தாள். குளிர் காரணமாக, "கையது கொண்டு மெய்யது பொத்தி , கால்களை மடக்கிச் சுருட்டி, அநாதையான ஒரு நாய்க்குட்டி மாதிரிக் கிடந்தாள். அவள் அழுதிருந்தாள் என்பதன் அடையாளமாகக் கன்னத் தில் நீர்க் கோடும் சுவடிட்டிருந்தது. அட பாவமே, பனியிலும் குளிரிலும் இந்தப் பிள்ளை இப்படியா...' என்று அவர் பதறினார். பத்மா என்ன இது?’ என்று அவசரமாக அவளை அள்ளி எடுத்தார். - அவள் பக்கத்தில் ஒரு பை கிடந்ததை அவர் அப்போதுதான் கவனித்தார். அதில் அவளுடைய பாவாடை சட்டைகள் திணிக்கப் பட்டிருந்தன. அவள் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘என்னை விட்டுப் போகாதீங்க. நானும் உங்க கூட வருவேன். நீங்க எந்த ஊருக்குப் போனாலும், என்னையும் கூட்டிட்டுப் போங்க!' என்று சொல்லிக் கொண்டே அழுதாள். அவர் ஒன்றும் தோன்றாதவராய், ‘என்ன பத்மா இது! ராத்திரி எல்லாம் இங்கேயா படுத்திருந்தே! என்று கேட்டார். - - 'உம்' என்று தலையை அசைத்தவள். நீங்க என்னை விட்டுப்போட்டு, இருட்டோடு போயிருவீங்கன்னு பயந்து, இங்கேயே வந்து படுத்துக்கிட்டேன். என்னை விட்டுட்டுப் போகப்படாது. நானும் உங்ககூட வருவேன்' என்று கேவுத லோடு தொடர்ந்து பேசினாள். வ.-3 -