பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 வல்லிக்கண்ணன் கதைகள் வெற்றாய், சூன்யமாய், வறண்ட புழுதி மண்ணாய்ப் போய்விட்ட இந்த வாழ்க்கையில் நானும் உயிரோடு இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, சாரமற்றுத் திரிந்து கொண்டிருப்பதைவிட, இதற்கு முடிவு கட்டுவதே புத்திசாலித்தன்மான காரியம் ஆகும். இதோ முடிந்து விடும் எல்லாம்; ஒரு சில கணங்களில். விநாயகமூர்த்தி என்கிற ஒருவன் இருந்தான்' என்று பேசப்பட வேண்டிய நிலைமை தோன்றும்... ஹஅம்! யார் பேசப் போகிறார்கள்? நினைத்துப் பார்ப்பதற்கு எவர் இருக்கிறார்கள்? அப்படிப் பேசுவதனாலோ, நினைப்பதனாலோ இந்த இவனுக்கு இனி என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? அவசர உலகத்திலே, அர்த்தமற்ற வாழ்வில், முட்டி மோதித் திணறிக் கொண்டிருக்கும் யந்திர உலகப் பொம்மைகள் போன்ற இம் மனிதப் பூச்சிகள் மத்தியிலே, நடமாடும் ஏதோ ஒரு சாயை மாதிரி நான் சஞ்சரித்துக் கொண்டிருப்பதற்கு அவசியமும் இல்லை. அர்த்தமுமில்லை என்று தான் முடிவு கட்டியாயிற்றே! விடுதலைக்கு ஒரு குறுக்கு வழி - வெறுமைக்கு முடிவு கட்டும் பயணச்சீட்டு இதோ, இதோ... விநாயகமூர்த்தி தனக்கு முன்னே உத்திரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பார்த்தான். அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. - அவன் கண்கள் அந்த அறையின் வாசல் பக்க மிதந்தன. அறைக் கதவு நன்கு அடைக்கப்பட்டு, அழுந் தத் தாளிடப் பெற்றிருந்தது. திருப்திதான். -