பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்சண்ணன் 44 விநாயகமூர்த்தியின் காதிலும் விழுந்தது. அவன் சிரித்த, வாறே தடந்தான். ... } ஒரு வீட்டின் முன்னால் சில செடிகள் கரும் பச்சை இலை கள் ஏந்தி நின்றன. ஒரு செடியில் மூன்று பூக்கள் செக்கச் செவேல் என்று சிரிப்பைச் சிந்தின. செம்பருத்திப் பூக்கள், ஒளி வெள்ளத்தில், நீலவானின் கீழே, கரும் பச்சைச் சூழ லில், செக்கச் சிவந்த பெரிய மலர்கள் மிகவும் எடுப்பாக, எழில் மயமாகக் கொலுவிருந்தது, அவனைக் கவர்ந்தது. மகிழ்வு தந்தது. மற்றும் பல நிற மலர்கள் ஆங்காங்கே பூத்துக் குலுங் கின. இனிய காட்சிகள். . அவற்றை ரசித்த வண்ணம் நடந்த அவனுக்கு முன் னால் ஒரு பெண், மெதுவாகச் சென்று கொண்டிருந்தாள். அவள் தோளுக்கு மேலே சின்னஞ்சிறு தலை-குழந்தை முகம் -எட்டிப் பார்த்தது. பின்னால் வந்த பெரியவனைப் பார்த்து அது சிரித்தது. சுடரொளி மிதக்கும் அழகிய கண்களும், பிதை நெற்றியும், அதற்குமேல் சுருள் சுருளாகப் புரண்டு கிடந்த கருங்கூந்தலும் அருமையான பொம்மையின் நினைப் பைத் தந்தன. குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. மாமா, மாமா!' என்றது. அதன் சிரிப்பும் மழலையும் அவனைப் பரவசப்படுத்தின. தாய் திரும்பிப் பார்த்தாள். அவளது அகன்ற விழிகளின் ஒரு ஓரத்தில் தேங்கிய பார்வையும், குழந்தையின் மகிழ்ச்சி அவளுக்கு உண்டாக்கிய ஆனந்தத்தினால் படர்ந்த முக மலர்ச்சியும் இனிய காட்சிகளாயின.