பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 243. வாழ்க்கையில் துயரங்கள் அதிகமிருந்த போதிலும், அவற். றைச் சகித்துக் கொண்டு வாழ்வதில் ஒரு இனிமை இருப் தாகத் தான் தோன்றியது. பலருடைய வாழ்க்கையையும் கவனிக்கையில் இது நன்றாகத் தெரிகிறது. х குழந்தையைக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த பெற்றோர்களும், பள்ளிக் கூடம் சென்ற சிறுவர் சிறுமியரும், சந்தோஷமாகப் பேசிச் சிரிக்கும். தம்பதிகளும், எதையோ வம்பளத்து மகிழ்ந்து போன ஒரு கிழவனும் கிழவியும் அவன் பார்வையில் பட்ட எல்லாக் காட்சிகளும் அவ. லுக்கு உனக் கிளர்ச்சி ஏற்படுத்தின. * "இவர்கள் எல்லாம் வாழ்க்கையை வெறுக்கவில்லையே. கத்தோஷம் அனுபவிக்கத்தானே செய்கிறார்கள்? இவர் களைப் போல-இவர்களோடு சேர்ந்து-நானும் வாழ்வின் சிறு சிறு இனிமைகளைச் சுவைத்து ரசிக்கக் கற்றுக்கொள் எாததுதான் நான் செய்த பெரிய தவறு’ என்று அவன் கரு ரோட்டின் ஒரு ஓரத்தில் நின்று, பெரிய ரஸ்தாவில் ஒடிக் கொண்டிருந்த நாகரிக நதியின் வேக இயக்கத்தைக் கவனிப் பதில் ஈடுபட்டான் அவன். அவனுக்கு அருகில் ஒரு கிழவி வந்து நின்றாள். "பிச்சை கேட்க வருகிறாளோ என்னவோ!' என்றது அவன் மனக். * . அவளோ அச்சம் கலந்த நோக்குடன் ரஸ்தாவையும் அவனையும் மாறி மாறிப் பார்த்து நின்றாள். என்ன? என்ன வேனும்?' என்று கேட்டான்.