பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 வல்லிக்கண்ணன் கதைகள் 'அந்தப் பக்கம் போகணும் ரோட்டைக் கடந்து போகப் பயமாயிருக்கு’ என்று அவள் சொன்னாள். 'எப்படியும் தொலை. ரோட்டில் இறங்கி, காரில் அடி பட்டுச் சாகு, நீயெல்லாம் ஏன் இப்படித் திரியவேணும்?’’ என்று எரிந்து விழக்கூடியவன்தான் அவன். நேற்று இவ் விதம் ஒருத்தி பேசியிருந்தால், அவன் அவ்வாறுதான் முணு முணுத்திருப்பான். ஆனால், இன்று அவன் உள்ளத்தில் இரக்கம் சுரந்தது. நில்லு. நான் உன்னை இட்டுச் செல்கிறேன்’ என்று கூறினான், அப்படி உதவவும் செய் தான். சமயம் பார்த்து, அவளை மெதுவாக, கையைப் பிடித்து அழைத்துச் சென்று ரஸ்தாவுக்கு அந்தப் பக்கம் கொண்டு சேர்த்தான். அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். நீ நல்லாயிருக் கணும். நீ இல்லைன்னு சொன்னால், நான் இதை எப்படிக் கடந்துவர முடியும்?' என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவளுடைய நன்றி உணர்வும் வாழ்த்துதலும் அவள் உள்ளத்தைத் தொட்டன. அங்கு ஒரு மகிழ்வும் நிறைவும் ஊற்றெடுத்தன. “நான் இல்லாமல் போயிருக்க வேண்டியவன்தான். கயிறுமட்டும் அறுந்து போகாமல் இருந்திருப்பின் இந்த விநாயகமூர்த்தி மாஜி மனிதனாகத்தானே தொங்கிக்கொண் டிருப்பான்!” என்ற எண்ணம் துள்ளியது அவனுள். இது ஒருவிதமான உதைப்பையும் ஏற்படுத்தியது. "மடத்தனம். தன்னுயிரைத் தானே கொலை செய்து கொண்டு, விடிவு கண்டுவிடலாம் என முயற்சி செய்வது மடத் தனமேதான் என்று அவனது சிந்தனை உறுத்தியது. * வாழ்க்கைப் போராட்டத்தில் சமாளித்துக்கொண்டு...'