பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 48 அவன் பார்வையைக் கவர்ந்தது வேகமாக ஒரு கார் வருகிறது. எதிரேயிருந்தும் கார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சிறுவன் ரோட்டைக் கடந்துவிடலாம் என்று துணிந்து ஓடுகிறான். சேச்சே, என்ன முட்டாள்தனம்' விநாயகமூர்த்தி வேகமாகத் தாவி, அப்பையனைப் பற்றி விழுத்தான். சரியான சமயத்தில் கார் பிரேக் போட்டு நின்றது. பலரும் பதறினர். இஷ்டம்போல் சொல் எறிந் தனர். அவன், நிச்சயமான சாவை நோக்கி அவசரமாகச் சென்ற ஒரு உயிரைக் காப்பாற்றும் துடிப்புடன், அச் சிறு உடலைக் கைகளில் எடுத்து, தன்னோடு அணைத்துக் கொண்டு பத்திரமான இடத்துக்குத் திரும்பினான். நாகரிக நதி மீண்டும் வேகமாகச் சுழித்து ஓடியது. 'என்னடா இப்படிச் செய்தே? செத்துப் போகிறதுக்கு இருந்தியே!” என்று அனுதாபத்தோடு பேசினான் விநாயக மூர்த்தி. தன்னைப் பார்த்தும் இதேவார்த்தைகளைச் சொல் வதற்கு யாருக்கும் உரிமை உண்டு என்றும், ஆனால் அப் படிச் சொல்வதற்குத்தான் யாரும் இல்லை என்றும் அவன் மனம் சிறு குரல் கொடுத்தது. இந்த முரணை எண்ணியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. 'உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி எழுவது போலும் பிறப்பு என்கிறார்கள். நான் தூக்கத்தைத் தழுவ முயன் றேன். ஆனால் தூங்காமலே விழித்துக் கொண்டேன். மற்ற வர்களிடம் அன்பு காட்டி, உதவிகள் செய்வதில் தனி இன்பம் பிறக்கத்தான் செய்கிறது” என்று எண்ண ஓட்டம் நிகழ்ந்தது அவன் சித்த வெளியில். - . .