பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 வல்லிக்கண்ணன் கதைகள் ரோட்டில் ஒடும் கார்களையும் பிறவற்றையும் பார்த்து, அவற்றிடையே சிக்கிச் சாகவிருந்ததை நினைத்து, உடல் பதறி நின்றான் சிறுவன். அவனை விநாயகமூர்த்தி குனிந்து பார்த்த சமயம், சிறுவன் தலை நிமிர்த்திப் பெரியவன் முகத் தைப் பார்த்தான். இருவர் கண்களும் சுடரிட்டன. முகம் முழு மலர்ச்சி காட்டியது, 'மனமாரச் சிரிக்கிறபோது மனித முகம் விசேஷமான ஒரு கவர்ச்சியைப் பெறுகிறது’’ என்று எண்ணினான் விநா யகமூர்த்தி. இன்று நாம் புதிதாகப் பிறந்தோம். நம்ம இரண்டு பேருக்குமே இன்று பிறந்த நாள்தான்! அன்த்க் கொண்டாடுவோம், வாடா பயலே! ஒட்டலுக்குப் போய் ஸ்வீட், காரம், காப்பி எல்லாம் சாப்பிடலாம்' என்று சிறுவ னின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய ஒட்டலை நோக்கி நடந்தான். - சிறுவனுக்கு அவன் பேச்சு புரியவில்லைதான். ஆயி னும், வயிற்றுக்கு நிறைய ஏதோ கிடைக்கப் போகிறது என்று புரிந்தது. அந்த உணர்வு அவனுக்கு ஆனந்தம் தந்தது. அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவனை வேடிக்கையாகப் பார்த்த விநாயகமூர்த்திக்கும் சிரிப்பு வந்தது. D சுதேசமித்திரன் தீபாவளி மலர்-195 ്l-&