பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv மரபு வழியில் பூத்து மணக்கின்ற மூத்த எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணனை, அவர் வாழும் காலத்திலே, கெளர விப்பது அவசியம் என்பதை உணர்ந்து அவர்க்கு விழாவெடுக் கின்ற தம் இலக்கிய வட்டத்தாரின் அக்கறை, தமிழ் நெஞ்சங் கட்கு இதம் சேர்ப்பதாகும். இந்நூலில் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் தம் முன்னு சையில் குறிப்பிட்டுள்ளவாறு - பல்வேறு சுவைகள் பரிமளிக் கின்ற பாங்கில், பல்வேறு இதழ்களில் வெளிவந்து இனிமை தந்த அவர்தம் சிறந்த சிறுகதைகளின் இனிய தொகுப்பைத் தமிழ் வாசக உலகிற்கு வழங்குகின்றோம். இக்கதைச் சித்திரங்களின் அழகைப் பருகிடத் தமிழ் உள்ளங்களை அழைத்து மகிழ்கின்றோம். இந்நூலை வெளியிட இசைவு தந்த ஆசிரியர் திரு இல்விக்கண்ணன் அவர்கட்கும், நூல் உருவாகிடக் காரண மான நண்பர்கள் நெய்வேலி திரு மு. இராமலிங்கம், திரு குறிஞ்சி வேலன் அவர்கட்கும், இதனைத் தனி அக் கதையோடும் மதிப்போடும் சீரிய முறையில் அச்சேற்றித் தந்த நண்பர் திரு பொன்விஜயன் அவர்கட்கும், அழகிய முகப்போவியம் வழங்கிய கலைஞர் திரு மருது அவர்கட் கும், நூலமைப்பிற்கு உதவிய நண்பர் கலைஞன் திரு மாசிலாமணி அவர்கட்கும் எங்கள் நன்றி உரியன. குறிஞ்சிபாடி சு. சம்பக்தன் 20-12-1991 (அருட்செல்வன்), மணியம் பதிப்பகம்.