வல்லிக்கண்ணன் 54 வத்தான்; அடையாளமா இருக்குமின்னு. சாயங்காலம், அண்ணன்மாரெல்லாம் அப்பாவைக் காணோமேன்னு அழு தாங்க. 'வீட்டுக்கு வழி தெரியாதே,எப்படிப்போறது?’ன்னு அழுதாங்க. குள்ளன் மட்டும் அழாமே, 'நான் கூட்டிக் கிட்டுப் போறேன், வாங்க'ன்னு தைரியமாப் பேசினான். சாலையிலே, வழிநெடுக வீசிவெச்ச வெள்ளைக் கல்லுகளை அடையாளம் பார்த்துக்கிட்டு அவன் முன்னாலே நடந்தான். எல்லாரும் அவன் பின்னாலேயே போனாங்க. வீடு வந்து சேர்த்துட்டாங்க...” 'கதை போதும்’ என்றாள் வள்ளி. கதை முடியல்லே. இன்னும் நிறைய இருக்கு." 'இது வேண்டாம். வேறே கதை சொல்லு. இல் லேன்னு, எனக்கு அழுகை வந்திரும்.” அவள் அழுவதை தாத்தா வரவேற்கத் தயாராக இல்லை. வேறு கதைகளைச் சொன்னார். வழக்கமான குழந்தைக் கதைகள்தான். ஆனால் வள்ளியின் நினைப்பு குள்ளன் கதையிலேயே நிலைத்து நின்றது என்பது அவள் கேட்ட கேள்வியிலிருந்து புரிந்தது. 'அம்மாவும் அப்பாவும் பொல்லாதவங்கதான். சின்னப் பையன்களை காட்டிலே விட்டுட்டா அவங்க என்ன செய்வாங்க? பயமா இருக்காது? பாம்பு கீம்பு கடிக்க வராது?’’ அவள் பார்வை அங்கும் இங்கும் அலைபாய்ந்தது, திடீரென்று கத்தினாள்: விளக்கைப் பெரிசாத் துாண்டுஅதோ பாம்பு மாதிரி என்னமோ தெரியுது...” "சும்மா இருட்டீ. இங்கே பூச்சி கீச்சி எதுவும் வராது” ன்று அதட்டினார் பெரியவர்.
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/64
தோற்றம்