பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 வல்லிக்கண்ணன் கதைகள்

  1. “தாத்தா... தரத்தா...”

எலி ஒன்று விழுந்தடித்து ஓடி வந்து அவள்மீது ஏறிக் குதித்துத் துள்ளிச் சென்றது. தாத்தா!' என்று பயங்கர மாகக் கூச்சலிட்டாள் அவள். அவர் என்னவோ ஏதோ என்று திடுக்கிட்டுப் பதறி எழுந்தார். மேலே என்னமோ விழுந்து ஓடிச்சு' என்று பயத்தோடு பலம்பினாள் பேத்தி. "எலியாயிருக்கும்... இப்படி பக்கத்திலே வந்து படுத் துக்கோ' என்று அவர் அவளை அருகில் அழைத்து, தைரியம் ஊட்டினார். என்னும், அவள் நெஞ்சு திக் திக்கென்று அடித் துக் கொண்டுதான் இருந்தது. 'இருட்டைக் கண்டு சின்னப்புள்ளைக்கு ஏன் தான் இந்த பயமோ? குப்புறப்படுத்து, தலையணையிலே முகத்தை புதைச்சு, கண்ணை சிக்னு மூடிக்கோ பயம் தெரியாது’’ என்று உபதேசித்தார் பெரியவர். அவள் அவ்வாறே கிடந்தாள். ஆயினும் அவளுக்குத் தூக்கம் வர வெகுநேரம் பிடித்தது... விடிந்ததும், தாத்தா எழுந்து அவர் வேலைகளை கவனிக் கப் போனார். - வள்ளி எழுந்தபோது, வெயில் வந்திருந்தது. குருவிகள் தத்தியும் பறந்தும் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு கோழி வீட்டுக்குள் வந்தது. அதை வெளியே தூரத்திக் கொண்டு ஓடினாள். பூனை ஒன்று ஒரு சுவர்மீது சோம்பலாகப் படுத்திருந்தது. அதைப் பார்ப்பதற்கு இப்போது அவளுக்கு பயம் எதுவு. மில்லை. அடி, குத்து!’ என்று கூட விரட்டினாள். -