பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. வல்லிக்கண்ணன் கதைகள் கிட்டு அழப்போறே!” என்று கலவரத்தோடு நல்ல வார்த்தை கள் சொன்னார், அவள் ஏன் கேட்கிறாள்! ஓடினாள். அங்கிருந்த கிணற் றை எட்டிப் பார்த்தாள். கிணற்றைச் சுற்றிக் கட்டியிருந்த துவளத்தின் மீது உன்னிச் சாய்ந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். பெரியவருக்கு உண்மையாகவே பயம். சே, இந்தப் புள்ளெ எத்தினி தொல்லை தருது: சனியன்! கொஞ்ச நேரம் கூடச் சும்மா இருக்கமாட்டேன்குதே!' - மனம் அலுத்துக் கொண்டது. அவர் வேகமாகக் கிணற்றருகே போனார். * ஏட்டி, உனக்கு பயமாயில்லே?’ என்றார். 'தண்ணி ஆழத்திலே கிடக்குது. தெரிய மாட்டேன்குது. அதுதான் எட்டிப் பார்த்தேன்' என்று சகஜமாக பேசி, தரை மீது கால் பதித்து நின்றாள் வள்ளி. 'கிணத்தை எல்லாம் எட்டிப் பார்க்கப்படாது, ஆமா” என்று சிரத்தையோடு உபதேசித்தார் அவர், அவள் கீழே விழுந்து, காயம்பட்டு, அழ போகிறாள் என்று தாத்தா பயந்துகொண்டு அவள் பின்னாலேயே போனார். அடிக்கொரு தரம் தன் பயத்தை ஒலிபரப்பிக் கொண்டிருந் தார். எச்சரித்தார்; மிரட்டினார். ஒரு நாய் ஓடி வந்தது. அவள் ஒரு கல்லை எடுத்து அதன் மேலே வீசி எறிந்தாள். கல் நாய் மீது படவில்லை. "ஏட்டி, நாய் உன்னை கடிச்சுப் போடும்” என்றார் பெரியவர். "அது ஒண்னும் கடிக்காது. அதுதான் ஓடியே போயிட்டுதே. நாயைக் கண்டா எனக்கு பயமே கிடையாது. தெரியுமா?’ என்று ஜம்பம் அடித்தாள் சிறுமி.