பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 6G, 'தாயிட்டே எல்லாம் சேட்டை பண்ணப்படாது. ஒரு சமயம் இல்லாட்டி ஒரு சமயம் லபக்குனு கடிச்சிரும்' வள்ளி எதிர்ப்புரை கூறவில்லை. சுவர் மீது சார்த்தப் பட்டிருந்த ஏணி அவள் கவனத்தைக் கவர்ந்தது. ஒடிப்போய் மூன்று படிகள் ஏறி விட்டாள். அதன் பிறகு தான் தாத்தா கவனித்தார். பதறினார். 'எட்டி ஏட்டி, கீழே இறங்கு, கால் தவறி விழப்போறே. ஏணியே சரிஞ்சிரும். சே, இந்தப் புள்ளை என்ன பாடு படுத் துது” என்று எரிச்சலோடு குறிப்பிட்டார். . "ஏன் தான் நீ இப்படி பயப்படுறியோ?” என்று கேட்ட படி கீழே குதித்தாள் வள்ளி. 'இப்படி எல்லாம் குதிக்கப்படாதுன்னு எத்தனை தடவை சொல்றது? காலு கையி முறிஞ்சிரப் போகுதுட்டி!' என்று பெரியவர் கத்தினார். அவருக்கு வேறு அலுவல் எதுவோ வந்தது. வள்ளி, வீட்டுக்குள்ளே போ, நான் இதோ வாறேன்' என்று சொல்லி விட்டுப் போனார். வள்ளி குதித்துக்கொண்டே உள்ளே போனாள். சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் தலை மொட்டை மாடியில் தென் பட்டது. அங்கே திடுதிடுவென ஓடினாள். குட்டையான கைப்பிடிச் சுவர் மீது படுத்தபடி தோட்டத்தை எட்டிப் பார்த்து, '"தாத்தா ஏ தாத்தா!” என்று கத்தினாள். தோட்டத்தில் நின்று நிமிர்ந்து பார்த்த பெரியவர் நிஜ மாகவே பயந்து போனார். இந்தப் புள்ளை தட்டட்டிக் கவுதத்தின் மேலே ஏறி எட்டிப் பார்க்குதே! கால் தவறிக் கீழே விழுந்தால் என்ன ஆகிறது?-எனவே, கோபமாகக்