பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வல்லிக்கண்ணன் கதைகள் வண்டியில் விளக்குகள் மங்கல் ஒலி காட்டி சிரிக்கலாயின. வண்டித்தொடர் இடைவழி ஸ்டேஷன் ஒன்றில் நின்றது. அவளும் அவளைச் சேர்ந்தவர்களும் இறங்கிப் போய்விட்டர் என்றாலும், கைலாசத்தின் மனம் ஜங்ஷன் ஸ்டேஷனுக் கும் நாகரிக நகரத்துக்கும் இடைப்பட்ட இருள் செறிந்த சாலையில் மோகினிப் பேயால் அடிக்கப்பட்டு ரத்தம் கக்கிச் செத்துக் கிடந்த அவனைப் படம் பிடித்துக் காட்டி பதைத்தது வெகு நேரம் வரை. ... . . . . . சீ, என்ன கோளாறு இது என்று அவன் அலுத்துக் கொண்டான். நிமிர்ந்து உட்கார்ந்து, வெளியே பார்வை வீசி னான். - - எங்கும் இருட்டு இப்போது கறுப்பைக் கொட்டி வைத் திருந்தது. வானத்தில் நட்சத்திரங்களே இல்லை. மலைப் பகுதிகள் எப்பவோ போய்விட்டன. அச்சமூட்டும் சூழ்நிலை யில் ரயில்வண்டி ஒடிக் கொண்டிருக்கவில்லை என்பது அவ னுக்குத் தெரியும். என்றாலும் அவன் மனஅரிப்பு நீங்கிவிட வில்லை. - - கைலாசம் பயந்தாங்குளி'யாக வளர்ந்தவன் இல்லை. இரவு நேரங்களில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சுற்றித் திரிந்திருக்கிறான். ஒரு சமயம் ராத்திரி வேளையில் சுடு காட்டுப் பக்கம் போய் ஒரு மணி நேரம் தங்கி விட்டு வந்தவன் தான். பந்தயத்தில் வெற்றி பெறுவதற்காக. அது நிகழ்ந்தது அவனது.இருபதாவது வயதில். பதினெட்டாவது வயசில் ஒரு பந்தயத்தில் ஈடுபட்டு வென்றவன்தான் அவன். அவனிருந்த ஊருக்கு மேற்கே ஒரு வ. - 5