.67 வல்லிக்கண்ணன் கதைகள் ஆனால், அவை எல்லாம் முன்னொரு காலத்தில்’ என்று மதிப்பிடப்பட வேண்டிய விஷயங்கள் ஆக அல்லவா போய்விட்டன. இப்போது அவனுக்கு வயசு ஒன்றும் அதிகம் ஆகிவிட் வில்லை. இருபத்தாறோ என்னவோதான். உடல் முறுக் காகத்தானிருந்தது. எனினும் அவன் உள்ளத்தில்தான் பெரும் மாறுதல். பயம் எனும் உணர்வு அங்கே ஒரு மூலை யில் குடிபுகுந்து விட்டது. இருட்டு அவனைக் கலக்கமுற வைக்கும் பகை ஆயிற்று. இரவு நேரங்களில் அவனைப் பாடாய்ப்படுத்தி அலைக்கழியச் செய்யும் போதுகள் ஆகி விட்டன. இதற்கு ஒரு ராத்திரியில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணமாகும். தற்செயலான ஒரு விபத்து அது. கைலாசம் ஆழ்ந்து துங்கிக்கொண்டிருந்தான் வீட்டின் மத்தி அறையில், பழங்காலத்து வீடு அது, உள்ளுறப் பழுதுபட்டிருக்க வேண்டும். அதை யாரும் கவனிக்கவில்லை, நடு ராத்திரியில் திடும் என்றொரு ஒசை எழுந்தது. அந்த வீட்டில் அவனும் அவன் தாயும் மட்டுமே. அம்மா உடல் பதறி எழுந்தாள். அடுத்த வீட்டிலிருந்தும் இரண்டொருவர் பதைபதைப்புடன் வந்து கதவைத் தட்டினார்கள். விளக் கேற்றப்பட்டது. எலெக்ட்ரிக் லைட் அல்ல. சாதாரண மண்எண்ணெய் விளக்குதான். r கைலாசம் ೯9,55 உட்கார்ந்தான். அவன் نفسه பதறித் துடித்துக் கொண்டிருந்தது. அவன் நெற்றியில் வேர்வை. உடம்பிலும் வேர்வை பெருக்கெடுத்தோடியது. அவள் படுத்துக் கிடந்த இடத்தருகே- அவனது தலைக்கு ஒரு அடி தள்ளி - பெரிய கட்டியான செங்கல்லும் சுண் ணாம்பும் உயரே இருந்து பெயர்ந்து விழுந்து கிடந்தது.
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/77
தோற்றம்