பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi 1940களிலும் அதற்குப் பின்னரும் நான் எழுதிய கதைகள் எண்ணற்றவை. 1980களில் என்னைப்பற்றி எழுத நேர்ந்தபோது, நண்பர் ஜெய காத்தன் வல்லிக்கண்ணன் அந்தக் காலத்திலேயே ஆயிரம் கதைகளுக்கு அதிகம் எழுதியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டார். அது உயர்வுநவிற்சிதான். இன்றுவரைகூட நான் ஆயிரம் கதைகள் எழுதிவிட்ட தாகச் சொல்ல முடியாது. ஆனாலும், நிறைய நிறை யக் கதைகள் எழுதியுள்ளேன் என்று சொல்லலாம். விதம் விதமான கதைகள், உருவத்திலும், உள் ளடக்கத்திலும், நடையிலும் ரகம் ரகமான கதைகள்; உணர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் கதை கள், உள இயல் ரீதியான கதைகள்; மனிதர்களின் விந்தைப் போக்குகளையும், விசித்திரச் செயல்பாடு களையும், விபரீதக் கற்பனைகளையும், விரோத மான நம்பிக்கைகளையும், விதம் விதமான அனு பவங்களையும் வெளிப்படுத்துகிற கதைகள். இப்படி எத்தனையோ ரகங்கள். நான் எழுதிய கதைகளில் பெரும்பகுதி பத்திரி கைகளில் பிரசுரம் பெற்றுள்ளன - அவை எழு தப்பட்ட காலத்திலேயே. அப்படிப் பிரசுரம் பெற்ற கதைகளில் மிகச் சிலவேதான் புத்தக வடிவம் பெறும் வாய்ப்பை அடைந்தன. இதுவரை ஆறு தொகுதிகள் வந்துள் ளன. இப்போது குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகம் வெளியிடும் இத்தொகுப்பு எனது கதைகளின் ஏழா வது தொகுப்பு ஆகும். 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட் டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.