பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 7墅 பகல் நேரங்களில் இயல்பாக நடந்து கொள்வான் இருட்டு வேளையில்தான் அவன்மனம் பித்துற்று அவனை வதை செய்யும். -ரஸ்தாவில் நடக்கையில், வேகமாக வரும் கார் அல் லது பஸ் அவன் மேலே ஏறி, அவனை நசுக்கி ஓடும். அவன் மண்டை சிதைந்து, ரத்தம் திட்டு திட்டாகச் சிதறிக் கிட்க்க... அம்மா, என்ன கோரக்காட்சி!. -பஸ் வரவு நோக்கி, நடைமேடை மீது அவன் நிற். கிறான். எமன் மாதிரி ஒரு லாரி வருகிறது. கண், மண் தெரியாமல் ஒட்டப்படுகிற அது பாதையிலிருந்து விலகி, ஒரத்து மேடை மீதேறி, இரண்டு மூன்று பேரை சட்னி ஆக்குகிறது. அவனையும் கீழே தள்ளி துவையல்ாக்கி விடு கிறது. தாறுமாறாக நசுங்கிக் கிடக்கும் அவன்... சே, எவ் வளவு பயங்கரம்! இப்படி விபரீதமான எண்ண வலை பரப்பி, அதில் தானே சிக்கி, இடறி விழுந்து, திணறித் தவிக்கும் அவன் மனம். அதன் போக்கை அவனால் தடுக்க இயலவில்லை. மாற்றி அமைத்துப் பழைய தெம்பைப் பெறவும் முடிய வில்லை. இப்போது ரயிலில், செளகரியமான மூலையில் அமர்ந்து சுகமாகப் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் கைலாசம், வேக ஒட்டம் வண்டியின் அசைவுகளின்ால் தாலாட்டப் பெற்று, கண்களை முடியிருந்தான். துக்கக் கிறக்கம். வண்டி ஒடுகிற கடகட சத்தம் இச்ைத்துக் கொண்டேயிருந் - த்து. ஒரே சீராக எழுந்தி ஒலிகள் திடும்ென் பேதப்பட்டு கோர ஓசைகளாய் அலறுகின்றன. மென்மையான வின்