பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్ట్ల, வல்லிக்கண்ணின்கன்த்க்ள் அசைவுகள் உலுக்கலாகவும் மோதலாகவும் மாறின் பெஞ்சு, களில் அமர்ந்து தூக்கத்தினால் சாமி ஆடிக்கொண்டிருந்த ஆட்கள் குலுக்கித் தள்ளப்படுகிறார்கள். ஒருவர் மீது ஒரு வர் மோதி இடித்துக் கொண்டு, ஒருவரை மற்றவர் நசுக்கி, என்ன ஏது என்று புரியாவிடினும் ஏதோ ஆபத்து, என உணர்ந்தவர்களாய், தப்பிப் பிழைக்க வேண்டும்-தான்ே முந்தித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேணும்-எனும் உயிராசை உந்தித் தள்ள, வெறித்தனமாய்ப் போராடிச் சமட்டிக் கொண்டு, அப்படியும் முடியாதவர்களாய் மொத்த மாய் அடித்துப் புரண்டு விழுகிறார்க்ள் வண்டி விழுகிறது. வண்டித் தொடரின் இரண்டு மூன்று பெட்டிகள் விழுந்து, நொறுங்கி... பயங்கர ஓசைகள். மனித ஒலங்கள். விபத்துக் கால வேதனைக் கூச்சல்கள்... கைலாசமும் பெஞ்சிலிருந்து விழுந்து பிறரால் மிதித்துத் துவைக்கப்பட்டு, மேலே பாரமான பெட்டியோ எதுவோ விழுந்து நசுக்க பரிதாபகரமாகச் சாகி றான். ரத்தம் கக்கியவாறு, கூச்சல் போட முடியாமல் செத்துப் போகிறான்... கைலாசம் பதறியடித்து விழித்து, தன் இடத்தில் நிமிர்ந்து உட்காருகிறான். வேர்வை அவன் உடல் பூராவும் பெருகி ஆறாக ஓடுகிறது. திருதிரு என்று விழித்தபடி அங்குமிங்கும் பார்க்கிறான். தன்னை மீறிக் கதறி இருப் பானோ? எதிரிலும் அருகிலும் உள்ளவர்கள் அவனை ஒரு மாதிரிப் பார்பானேன்? அவர்கள் கேள்வி கேட்டுத் தொன தொணப்பார்களே! சனியன்! வண்டி பெரிய ஸ்டேஷனை அணுகிக் கொண்டிருந்தத னால், தண்டவாளம் விட்டுத் தண்டவாளம் மாறியதால், தட தடா கடகடா என்று பேரோசைகள் விதம் விதமாக எழுந்து கொண்டிருந்தன. ஜங்ஷன் வருது. எழுந்திரு இங்கே. இறங்கணும் என்று, முடிவை நெருங்கிவிட்ட பயணிகள் பரபரப்புக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.