பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வின் துடிப்பு -இது ப்யூர் லைக்காலஜி. ஆனால் லைக்கலாஜிக்கல் உண்மைகளை எத்தனை பேர் புரிந்து கொள்ளும் சக்தி பெற்றிருக்கிறார்கள்? இல்லை. அப்படி ஆற்றல் பெற் றிருப்பவர்களில்தான் எத்தனைபேர் விஷயத்தைப் புரிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்? புரிந்துகொள்ளச் சக்தி இல்லாமலும், உண்மையைப் புரிந்து கொள்வதற் க்ான மனம் இல்லாமலும் திரிகிற ம்க்குப்பிளாஸ்திரிகள், மடச் சாம்பிராணிகள், மண்டுகங்கள், மண்ணாந்தைகள் மத்தியிலேதான் ஐயாவாளைப் போன்ற மேதைகளும் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கு. இதுதான் வாழ்வின் ஐர்னி! சுயம்புலிங்கம் மூஞ்சியைச் சுளித்தான். வாயை எப்படி, எப்படிக் கோணலாக்க முடியுமோ அப்படி எல்லாம் நீட்டி யும் குறுககியும் சுருக்கியும் கோரணி பண்ணினான். கண்களை உருட்டிக் கொண்டான். தானாகவே சிரித்து வைத்தான். - ஐயாவுக்கு இப்போ குஷி மூட்! லைக்காலஜி என்ன சொல்லுது? இயல்பான உணர்ச் சிகள் பொங்கி எழுகிற போது அவற்றுக்கு உரிய போக்கு காட்டாம்ல், அமுக்கி ஆழ்த்திக் கொன்றுவிடத் தவிப்ப