பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 78. நடை காலுக்கு பலம் என்றும், மாலை நடை மனதுக்கு நலம் என்றும் அவன் அந்த வழியாக தினம் தினம் நடப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தான். சிரிப்புகளைப்பற்றிய நினைப்பு மனசில் அலைமோதியது. வெடிச்சிரிப்பு, துப்பாக்கிச் சிரிப்பு, மவுன்ச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, கிளுகிளுச் சிரிப்பு, மணிச் சிரிப்பு, கணைப்புச் சிரிப்பு... இவ்விதம் அடுக்கிக்கொண்டே போன் மனம் "பேய்ச் சிரிப்பு' என்றது. அப்படிச் சிரிக்கலாமே என்று உணர்வு உந்தியது. சிரித்தான். உரக்க, எவ்வளவு குரல் உயர்த்திச் சிரிக்க முடியுமோ அவ்வளவு பலமாகச் சிசித்தான். அவனுக்கு ரொம்ப திருப்தி, நடந்தான். முன்னே, ஒரு வளைவில், மரம் வெட்டிக் கொண்டி ருத்த ஒருவன் கைக் கோடரியை கீழே போட்டுவிட்டு, பயந்தவனாய், தடத்தின் மத்தியில் வந்து நின்று அண்ணாந்து பரக்கப் பரக்கப் பார்த்தபடி காணப்பட்டான், அப்படி ஆள் எவனாவது அங்கே இருக்கக்கூடும் என்ற எண்ணமே சுயம்புக்கு எழுந்ததில்லை. அந்த நினைப்பு எழுந்திருக்குமானால் அவன் அவ்வாறு சிரித்திருக்க காட்டான். சுயம்பு அருகே வந்ததும். அந்த மனிதன், 'ஐயா, செத்த முந்தி இங்கே ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டுதே?’ என்று இழுக்கவும், ஆமா, நான்தான் சிரித்தேன்’ என்றான் இவன், - 'நீங்களா சிரிச்சீங்க? நல்லாச் சிரிச்சீங்க போங்க. பேய் அலறின மாதிரி! நான் பயந்தே போனேன். சின்னம் புன்ளெக ஏதாவது அதைக் கேட்டிருந்தால் வெருவிச் செத்திருக்கும்!’ என்றான் மரம் வெட்டி,