பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7。 வல்லிக்கண்ணன் கதைகள் மவுனச் சிர்ப்பை முகத்தில் நெளிய விட்டபடி நடந்தான் சுய்ம்பு. தனது சிரிப்புப்பயிற்சி பெரும்வெற்றி பெற்றுவிட்ட ஆனந்தம் அவன் உள்ளத்தில் குமிழ்த்துக் கும்மாளி போட்டது. . இப்போது சுயம்பு தனிரகச் சிரிப்பு ஒன்றைச் சிதறி வைத்தான். - இப்படி எல்லாம் செய்தால் பைத்தியம், கிறுக்கன், லுர்ஸ் என்றுதான் எண்ணுவார்கள். ஸர்த்தான் எண்ணிட்டுப் போறாங்க. அதுனாலே நமக் கென்ன? நமக்காகத்தான் நாமே தவிர, மற்றவங்களுக்காக நாம் அல்ல. வீ ஆர் எபவ் ஆல் தீஸ் திங்ஸ்! - சிலபேர் தங்கள் குண இயல்புகளினால், உணர்வுச் சிறப்புகளினால், அறிவு ஆற்றல்களினால், மற்றவர்களைவிட மேம்பட்டவர்கள். சராசரி மனிதர்களின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகள் வகையரா தங்களை பாதிக்கா-பாதிக்கக் கூடாது-என்பது அவர்களது கருத்து. அத்தகைய அதிமனிதர்களில் அவனும் ஒருவன் என்பது சுயம்புலிங்க நினைப்பு. ஆகவே, பிறரது விருப்பு வெறுப்புகள், அபிப்ராயங்கள், சம்பிரதாயங்களை எல்லாம் தான் மதிக்க வேண்டியதில்லை என்றே அவன் நம்பினான். அப்படி மதிக்காமல், தன் மனம் போன போக்கில், உணர்ச்சிகள் உந்தும் வழியில், தான் வாழ ஊர், சமூகம், மனித இனம் தன்னை அனுமதிப்பது இல் லையே-ஏகப்பட்ட வேலிகளை பார்வைக்குப் புலனாகா வகையில் அமைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறதேஎன்ற குறை அவனுக்கு என்றும் உண்டு,