பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 80 -பின்னே என்ன? கவர்ச்சியான ஒரு பொருளை பார்க் கிறேன். அது எனக்குத் தேவை என்று ஆசை தூண்டுகிறது. அதை நான் என் இஷ்டத்துக்கு எடுத்துக்கொள்ள முடி கிறதா?. எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறேன் நான். அழகான குழந்தையை பார்க்கிறவர்கள் அதன் கன் னத்தைக் கிள்ளுகிறார்கள்; தட்டுகிறார்கள். ஆசையோடு எடுத்துக் கொஞ்சுகிறார்கள். அதேமாதிரி, அழகான, இனி மையான, பெண் எதிர்ப்படுகிறபோது அருகாமையில் நிற்கிற போது-பஸ் பயணம், ரயில் யாத்திரைகளில் மிகமிக நெருங்கி வர நேரிடுகிற போது - அவளது பட்டுக் கன்னத்தைத் தடவ, மூக்கைப் பிடித்து ஆட்ட, எழில் நிறை காதுகளை சொல்லமாய் கிள்ள, இப்படிச் சிறு குறும்புகள் பலப்பல செய்ய வேணும் என்று உளம் குறுகுறுக்கிறது. உணர்ச்சி உத்துகிறது. செய்ய முடிகிறதா நம்மாலே? அந்த எண்ணம் எழுந்ததும், அவ்வாறே செய்ய வேண்டும், செய்யும் உரிமை நமக்கு வேணும் என்றுதான் நான் சொல்கிறேன்....... சுயம்புலிங்கம் தனது எண்ணங்களை, கொள்கையை, தன் நண்பர்கள் ஒன்றிருவரிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்களும் தலையாட்டினார்கள். இவ்வித நினைப்புகளும் உணர்ச்சி உந்தல்களும் மனிதருக்கு எழுவது இயல்புதான் என்றும், ஆயினும் வாழ்க்கை முறைகளும் சமூக அமைப்பும் ஒழுக்க நெறிகளும் பிறவும் அவை சுதந்திரமாக மலர்ந்து விளங்குவதற்கு வகை செய்வதில்லை, என்றும் ஒப்புக் கொண்டார்கள். - சோதனை ரீதியாக நாம் இவற்றை செயலாற்றிப் பார்த்தால் என்ன?’ என்று கேட்டான் சுயம்பு. 'நமக்கு எதுக்குடே வீண்வம்பு!” என்றான் ஒருவன். "நல்ல ஐடியாதான் பிரதர். ஆனால் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது என்றான் இன்னொருவன்.