பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 வல்லிக்கண்ணன் கதைகள் என்னைக்காவது ஒரு நாள் நானும் எக்ஸ்பெரிமெண்ட் பண்ணலாம்னுதான் இருக்கேன். ஆனால் இப்ப சரிப்படாது' என்று சொல்லிவிட்டான் வேேறாருவன். முதுகெலும்பில்லாத பயலுகi’ என்று முடிவுகட்டினான் சுயம்பு. -நாம் ஒருநாளாவது நம் உணர்ச்சி உந்துதல்களின் படி வாழ்ந்து பார்த்துவிட வேண்டியதுதான். > அதற்கு நல்லநாள் என்று குஷியான மூட்” பெற்றி ருந்த இன்றைய தினத்தை அவன் மனம் சிபாரிசு செய்தது. ஹவிட்...ஹ்விட்டோ ஹ்வீட் என்று அது சீட்டி அடித்துக் குதுகலித்தது. சுயம்புலிங்கம் உற்சாகமாக வெளியே வந்தான். - தெருவில் ஒரு நாய் ஓடிவந்தது. அவனை ஏறிட்டுப் பார்த்தது. நின்றது. மோந்து பார்த்துவிட்டு, சுவர்ஒர மாகப் போய் நின்று, ஒரு காலை உயர்த்தியது. சுவரின் அந்தப்பகுதி நனைந்தது. அவனை அலட்சியமாக நோக்கு வது போல கண்ணை ஏவியபடி அது நகரலாயிற்று. -சவத்துப்பய நாய் மேலே கல்லை வீசணும். சுயம்பு உடனே குனிந்து, பெரும் கல் ஒன்றை எடுத்து தாய்மீது விட்டெறிந்தான். கல்லெறியப்பட்ட நாய் காள்காள் என்று கத்தியவாறு, ஒரு காலை நொண்டிக் கொண்டு ஒடலாயிற்று. . அவன் அதற்கு எதிர் திசையில் நடந்தான். வ.-6