பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 82 ஒரு வீட்டின் முன்னால் அடுக்கு அரளி கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கி நின்றது. செம்பருத்திப் பூக்கள் சிவப்பாய் சிரித்து மிளிர்ந்தன. -அசளிப் பூக்கள். அடுக்கரளி ரோஜப்பூ மாதிரியே இருக்கு. பறிச்சால் என்ன? அருகில் சென்று, கைநீட்டி: செடியை வளைத்து இழுத் துப் பறித்தான். ஏய் யாரது அங்கே செடியை முறிக்கிறது?’ என்று ஒரு உரிமைக் குரல் வீட்டினுள்ளிருந்து உறுமியது. -பதில் சொல்லத் தேவை இல்லை. அவன் பாட்டுக்கு நடந்தான். தெருவோடு போறவனுக்கு சும்மா போக முடியலியோ? குரங்குத்தனம் பண்ணிக்கிட்டேதான் போகனுமோ?! உறுமிய குரல் வெளியே வந்து, அவனுக்குப் பின்னால், வாசலில் இருந்து கத்தியது. . . திரும்பிப் பாராமலே நடந்த சுயம்பு பூவைக் கசக்கி வழி யில் துவினான். -குரங்காமில்லே குரங்கு ! அங்கே ஒரு கன்றுக்குட்டி சோம்பலாக நின்றது. '94. விளையாடு பாப்பா, நீ ஒய்ந்திருக்கலாகாதடி பாப்பா!' என்று பாடியவாறு, சுயம்பு அதன் வாலை முறுக்கி அனான். கன்றுக்குட்டி மெதுநடை போட்டு விலகி நகர்ந்தது.