பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 84 சுயம்புவின் ஜாலி அதிகரித்தது. முகத்தில் சிரிப்பு விளையாட நடந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பெண் ஒருத்தி நின்றாள். நாட்டுக் கட்டை , கவர்ச்சி நிறைந்த தோற்றம். அவளுடைய கண்கள் மிக அழகாக இருப்பதாக அவனுக்குப்பட்டது. ரசிக்கப்பட வேண்டிய முகம் உடைய அவளைப் பார்த்து, ரசனையின் சான்றிதழாக ஒரு சிரிப்பு வழங்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. எண்ணம் எழுந்தால் உடனே செயலாற்ற வேண்டியதுதானே! சிரித்தான். நன்றாக அவளைநோக்கி, அவளுக்காக, அவளது வசீகர வனப்புக்காக, ரசிகச் சிரிப்பை உதிர்த்தான். 'மூஞ்சியைப் பாரு குரங்கு பீடை, பாடை, சவம். தரித்திரம். முழிச்சுக்கிட்டு இளிக்கதைப் பாரேன் என்று முணமுணத்தாள் அவள். சுயம்புவின் காதிலும் அது விழத்தான் செய்தது. இன்னொன்றும் விழுந்தது. . 'ஏ குட்டி அம்மே! ஏளா ஏ குட்டி!' என்று நீண்ட குரலெடுத்துக் கூப்பிட்டாள் ஒரு முதியவள். அதைத் தொடர்ந்து அவளே வந்துவிட்டாள். இங்கேயா நிக்கிறே? என்று கேட்டாள், சுயம்புவின் உள்ளம் உந்தியது. அவன் வாய் பாடியது. என்றோ கேட்ட பழம்பாட்டு. - "குட்டி அம்மெ நாத்தினா சில்லறையை மாத்தினா! பொட்டி வண்டி கட்டிக்கிட்டு பட்டணம் பாக்கப் புறப்பட்டா!'