பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வல்லிக்கண்ணன் கதைகள் குட்டி அம்மை என்று அழைக்கப்பட்டவள். அவன் பக்கம் முறைத்தபடி 'தூ' என்று காறித் துப்பினாள். “இங்கே துடைப்பக்கட்டை எதையும் காணேமே?” என்றாள். "சீ துமையைக் குடிக்கி விளக்குமாத்தை எடுத்து, சாணியக் கரைச்சு ஊத்தி, சரியானபடி பூசைக்காப்பு கொடுக்கணும். கொழுப்பு மிஞ்சிப் போச்சோடா கழுதை? என்று கூப்பாடு போட்டாள் பெரியவள். அங்கே நின்றால் ஆபத்து என்று உள்ளுணர்வு உணர்த்தவும், பிள்ளையாண்டான் வேகமாக நடையைக் கட்டினான். எங்கெங்கோ சுற்றிவிட்டு சுயம்புலிங்கம் ஒரு தெரு முனைக்கு வந்தான். ஆள் நடமாட்டம் சுமாராக இருந்த இடம். எதிரே வந்து கொண்டிருந்த ஒரு பெண்- 'ஸ்டைல் மிஸ்ஸி என்றது அவன் மனம் - சைக்கிளுக்கும் கட்டை வண்டிக்கும் விலகி ஓரமாக நடந்ததனால், அவனை இடிப்பதுபோல் வந்தாள். - "இடி ராஜா'க்கள் இருப்பது போல, இடி ராணி' களும் இருக்கிறார்கள் நாகரிக நகரங்களிலே! மையுண்ட அகல் விழிகள் அவன் முகத்தில் மொய்த்துச் சுழன்றன. அவள் சிரித்தாளோ இல்லையோ என ஐயுறச் செய்யும் ரேகை ஒன்று அவளது உதடுகளில் ஊர்ந்தது. பையன் கிறங்கிப் போனான். தன்னுடைய முக காந்தி வில் சொக்கிப்போய்த் தான் அந்த சுந்தரி இந்த வேலை பண்ணுகிறாள் என்று நினைத்தான். அவளுடைய கையைப்